அக்னிப்புரட்சி இன்றைய (24.08.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (24.08.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (24.08.2021) முக்கிய செய்திகள்.

💥 சென்னையில் பெட்ரோல் விலை 12 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.20 க்கும், டீசல் விலை 14 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.93.52 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

* Motor Vehicle Taxation-  வரி செலுத்த செப்டம்பர் 30ம் தேதி வரை கால வரையறையை நீட்டித்து தமிழக அரசு ஆணை

* பாதிப்பை சரிசெய்யும் குழுவில் 750 பேர் செயல்பட்டு வருவதாக இன்ஃபோசிஸ் சார்பில் விளக்கம். செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இணையதளம் சீரமைக்கும் பணியை முடிக்க காலக்கெடு விதித்து நிதியமைச்சகம் ஆணை

💥 தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் KT ராகவன் பதவி ஆசை காண்பித்து மாவட்ட அளவிலான பெண் நிர்வாகிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்து வழங்கி வருவதாக குற்றச்சாட்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் உளவு வீடியோ வெளியிட்டார் பாஜகவை சேர்ந்த ஊடகவியலாளர் மதன் இரவிச்சந்திரன்.

* இந்த வீடியோ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டதாக மதன் இரவிச்சந்திரன் தகவல்.

இதன் காரணமாக  தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக மதன் டைரி யூடியூப் சேனல் நிர்வாகிகள் காவல்துறையிடம் வேண்டுதல்.

https://youtu.be/vTWayYsaPw4

குறிப்பு: இந்த விழியம் Censor செய்யப்பட்டிருந்தாலும் குழந்தைகள் பார்ப்பதற்கு ஏதுவானது அல்ல.

💥 தமிழகத்தில் கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது கல்லூரி கல்வி இயக்க‌கம்.

மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்.

தடுப்பூசி போடாதோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் - கல்லூரிக் கல்வி இயக்ககம்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை.

செப்.1-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

💥 தமிழகத்தில் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

கடந்த ஜூலை 26-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.

💥 செப். 4-ம் தேதி மாணவர்களுக்கான தரவரிவைப் பட்டியல் வெளியாகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி; வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும்; முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம்- கருணாநிதி நினைவிடம் குறித்து எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்.

* புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி.

சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

செப்டம்பர் 14-ம் தேதி இருவரும் ஆஜராக நீதிபதி அலீசியா உத்தரவு.

சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதால் வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் மனுவில் கோரிக்கை.

💥 தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் 55 இடங்களில் செயல்படுகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 4.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 2.87 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* தமிழக பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கே.டி.ராகவன் ராஜினாமா.

சமூக வலைதளத்தில் கே.டி.ராகவன் தொடர்பான சர்ச்சை வீடியோ வெளியான நிலையில் ராஜினாமா.

தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும் - கே.டி.ராகவன்.

என்னையும், என் கட்சியையும் களங்கப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்; சட்டப்படி சந்திப்பேன் - கே.டி.ராகவன்.

💥 சென்னையின் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

சென்னை, ஆந்திரா அருகே வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் பகல் 12.35 மணியளவில் நில நடுக்கம் - தேசிய நில நடுக்க ஆய்வு மையம்.

பெசண்ட் நகர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட சில இடங்களில் லேசான நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர்.

வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆகப் பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காக்கிநாடாவிலிருந்து 296 கி.மீ. கிழக்கு திசையில், சென்னைக்கு சுமார் 322 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

💥 தாம்பரம், கடலூர் உள்ளிட்ட நகராட்சிகளை மாநகராட்சியாக அறித்தது தமிழ்நாடு அரசு.

காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தபடும்.

திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும் - தமிழ்நாடு அரசு.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர் உள்பட 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் - தமிழ்நாடு அரசு.

💥 ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு:

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ 1,000-ல் இருந்து ரூ 2,000 ஆக உயர்த்தப்படும்.

சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு.

💥 ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்.

கடத்தப்பட்ட விமானம் காபூலில் இருந்து ஈரான் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்.

விமானம் கடத்தப்பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல்.

💥 ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள் வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில்  மேற்கொண்டு விசாரணை நடத்த காவல்துறைக்கு தடைவிதிக்க கோரிய வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 27ம் தேதிக்கு தள்ளிவைப்பு

💥 தமிழகத்தில் புதியதாக உருவாகும் 29 நகராட்சிகளின் பட்டியல்

காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் KN நேரு அறிவிப்பு.

கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம் பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும் - பேரவையில் அமைச்சர் KN நேரு அறிவிப்பு

💥 நடுவண் அமைச்சர் நாராயன் ரானே கைது!

நாடு விடுதலை பெற்று எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது  கூட தெரியாத மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைய வேண்டும்" என நடுவண் அமைச்சர் நாராயண் ரானே பேசிய நிலையில்  காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

💥 புதிதாக உருவான மற்றும் பிரிவினைக்கு உள்ளான 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என  உள்ளாட்சித்துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட பிறகு நாகப்பட்டினம் மாவட்டம் பிரிக்கப்பட்டது; இதனால் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தனியாக தேர்தல் நடத்தப்பட மாட்டாது என  உள்ளாட்சித்துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

💥காபூலில் தரையிறங்கிய உக்ரைன் நாட்டின் விமானம், ஈரானுக்கு கடத்தப்பட்டதாக ரசியாவின் செய்தி நிறுவனமான TASS  தெரிவித்துள்ளது

💥 மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அதிகரிப்பதற்கான அரசாணை வெளியீடு

💥 நான் மூன்று முறை வலியுறுத்தியும் அமைப்பு செயலாளருக்கு ஆதாரங்களை காட்சிப்படுத்த தவறி விட்டார்: ஊடகவியலாளர் மதன் இரவிச்சந்திரன் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.

💥 முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ₹39 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள நினைவிடத்தின் மாதிரி

சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் அரசின் முடிவுக்கு  அதிமுக வரவேற்பு

💥 பள்ளி உட்கட்டமைப்பை மேம்படுத்த ₹150 கோடி நிதி ஒதுக்கீட்டில் " பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் " 2021-22ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.

💥 வில்லங்கச் சான்று (Encumbrance Certificate - EC) இனி இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என பத்திரப் பதிவுத்  துறை தலைவர் அறிவிப்பு

* விஜய் செல்வது, விஜய்காந்த் பாதையா? புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் Casual Interview.
https://www.facebook.com/behindwoods/videos/1577809902587521/
https://youtu.be/HsggjhbC3KI

💥 வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பக்தர்கள் வரவேண்டாம்: நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.

வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து பாதை யாத்திரையாக வரும் பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்ப செல்ல அறிவுறுத்தல்.

💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,585 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 27 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

கொரோனாவிலிருந்து மேலும் 1,842 பேர் குணமடைந்த நிலையில்; சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 18,603 ஆக உள்ளது.

* குற்றாலீஸ்வரன். 13 வயதில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர், உச்சத்தில் இருக்கும்போதே, அர்ஜுனா விருது வாங்கிய ஒரே ஆண்டில், விளையாட்டிலிருந்து விலகினார். இப்போது  மீண்டும் வந்திருக்கிறார்.

💥 விழுப்புரத்தில் திமுக கொடிக்கம்பம் நட்ட போது 13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார்

💥 புதிதாக ஆங்கில வழி கல்வி துவக்க அனுமதி கோரும் பள்ளிகளுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே இனி அனுமதி வழங்கலாம் என அதிகாரத்தை பகிர்ந்தளித்தார் பள்ளிக்கல்வித்துறை ஆணையர்

💥 ₹1 தமிழக அரசின் செலவீனத்தில் ₹0.60 அரசு ஊழியர்களின் ஊதியம்/ ஓய்வூதியத்திற்கு செல்கிறது என நிதியமைச்சர் முன்னுக்கு பின் முரணாக சொல்கிறார்

💥 - பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து JACTTO GEO அறிக்கை

அரசின் செலவுகளில் அரசு ஊழியர்களின் ஊதியம் பெறும் பங்கு மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைப்பது குறித்து அமைச்சர் அளித்த பேட்டி

💥 பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:
ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages