75வது சுதந்திர தினக் கொண்டாட்டம். சென்னை கோட்டையில் முதல் முறையாக தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். - Agnipuratchi

75வது சுதந்திர தினக் கொண்டாட்டம். சென்னை கோட்டையில் முதல் முறையாக தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Share This

75வது சுதந்திர தினக் கொண்டாட்டம். சென்னை கோட்டையில் முதல் முறையாக தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதல் முறையாக தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை ஆற்றினார்.

இந்திய நாட்டின் மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்க, உயிரையும் ரத்தத்தையும் வாழ்க்கையும் அர்ப்பணித்த இந்தியர்கள் அனைவருக்கும் எனது வீரவணக்கம்.

கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது வாழ்க்கையில் 50 ஆண்டுகள் உழைத்த நான் தமிழக மக்களால் முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.17,000த்தில் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படும்.

தமிழ்நாட்டு தியாகிகளின் மூச்சுக் காற்றை கொண்டு கட்டப்பட்டது தான் நினைவுத் தூண்.

சுதந்திர தின தூண் வெறும் கல்லாலும் சிமெண்டாலும் செங்கல்லாலும் கட்டப்பட்டது அல்ல; விடுதலைப் போராட்ட வீரர்களின் இரத்தத்தால், எலும்பால், சதையால் உருவாக்கப்பட்டது.

கொரோனா எதிர்ப்பு போரில் பங்காற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

3 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி வீணடிக்கப்பட்ட நிலையை மாற்றி கூடுதல் தடுப்பூசிகள் செலுத்தி இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி உள்ளோம்.

சமூகம்-அரசியல்-பொருளாதாரம் ஆகிய மூன்றிலும் தமிழ்நாடு ஒருசேர வளர வேண்டும் என்பதுதான் நம்முடைய கனவு; அதனை நிறைவேற்ற அரசு பாடுபட்டு வருகிறது.

சுதந்திர தினத்தின் பவள விழாவினை திமுக அரசு கொண்டாடுவது தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமிதம் அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

5 அடி உயரத்தில் 4 தலையுடன் கூடிய சிங்க முகம், 8 அடி உயர அசோக சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.

5 அடி உயரத்தில் 4 தலையுடன் கூடிய சிங்க முகம், 8 அடி உயர அசோக சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.

* இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி இரவு பகலாகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீர்ர்களுக்கும், தியாகிகளுக்கும் இந்த நாளில் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்துவோம் எனக் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்த நேரங்களில் எல்லாம் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார்.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிகளை வணங்கும் பொருட்டு கம்பீரமிக்க நினைவுத் தூண் எழுப்பி சிறப்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் அனைவரும் பாராட்டும் வகையில் விரைந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம் என்ற செய்தியை சுதந்திர தினத்தன்று தெரிவித்துக் கொள்வதில் பூரிப்படைகிறேன் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages