பாரா ஒலிம்பிக் போட்டிகளில் டெபிள் டென்னிஸ் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பவினா பென் படேலுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்து!
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் டெபிள் டென்னிஸ் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பவினா பென் படேலுக்கு வாழ்த்துகள்! உலக அரங்கில் சாதனைப் பயணமும், பதக்கக் குவிப்பும் தொடரட்டும்!
பவினா பென் படேலின் சாதனைக்கு அவரது தன்னம்பிக்கையும், மன உறுதியும் தான் காரணம். என்னால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்ற பவினா பென் படேலின் வார்த்தைகள் அவருக்கு மட்டுமல்ல சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் மந்திரம்!
No comments:
Post a Comment