பாரா ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நிஷாத் குமாருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நிஷாத் குமாருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தாண்டிய உயரம் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளது!
உயரம் தாண்டும் வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கத்தை மட்டும் வெல்லவில்லை.... ஆசிய அளவில் அவர் ஏற்கனவே படைத்த சாதனையை அவரே சமன் செய்துள்ளார். அவரது சாதனைப் பயணம் தொடர வேண்டும் என்பதே இந்திய மக்களின் விருப்பம் ஆகும்!
No comments:
Post a Comment