சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி
போராடி பெற்ற சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டில் இனிய வாழ்த்துக்கள். சுதந்திர வேட்கையில் களம் கண்டு போரடிய தலைவர்களை, போராடி உயிர்த்தியாகம் செய்த வீரர்களை போற்றுவோம். கொரோனா கோரத்தாண்டவமாடி முடக்கி வைத்திருக்கும் நெருக்கடி காலம். உழைக்கும் அடித்தட்டு மக்களின் வறுமை ஒழிய, பொங்கல்-தீபாவளி போன்ற திருநாளுக்கு இலவச வேட்டி - சேலை கிடைக்குமே என எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் மக்களின் பொருளாதார நிலை மேம்பட, ஏழை, நடுத்தர குடும்பத்து குழந்தைகளுக்கு தரமான கட்டணமில்லா கல்வி கிடைத்திட, அளவிடற்கரிய ஆற்றல் மிக்க இளைஞர்கள் படித்து வேலைவாய்ப்பில்லாமல் சந்தித்து வரும் பெரும் நெருக்கடி நிலை போக்கிடவும்.
அனைவருக்கும் தேவையான தரமான மருத்துவ வசதி கிடைத்திட பெண்களுக்கு எதிரான நெருக்கடிகளிலிருந்து காத்திட, நலிந்து வரும் விவசாயிகளின் வாட்டத்தை அகற்றிட, உணவு உற்பத்தி பெருக்கிட,நெசவாளர்கள் மீனவர்கள் நலன் பேண, உழைத்து உருக்குலையும் தொழிலாளர்கள் உரிமை நிலைநாட்ட, மேம்பாட்டுக்கான தொழில் வளர்ச்சி அடைந்திட, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேறிட, உரிய சமூகநீதி கிடைத்திட, எல்லோரும் எல்லாமும் பெற்று, வன்முறையும் தீவிரவாதமும் அகற்றி அமைதி நிலைநாட்டிட,சகோதர நல்லிணக்கமும் மனித நேயமும் நிலைத்திட,வலிமையும் வளமும் ஓங்கிட ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சுதந்திரத் திருநாளில் உறுதி ஏற்போம். கொரோனா ஒழிந்து அனைவரும் பாதுகாக்கும் நிலை வேண்டும். பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment