அக்னிப்புரட்சி இன்றைய (01.09.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (01.09.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (01.09.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலையில் 12 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.08 க்கும், டீசல் விலையில் 14 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.93.38 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

* சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.900.50க்கு விற்பனையாகிறது. 

ஒரே ஆண்டில் ரூ 285 உயர்வு, பொதுமக்கள் அதிர்ச்சி.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ 75 அதிகரித்து 1831.50 ரூபாயாக உயர்வு. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

* தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு; சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும்.
மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளி, கல்லூரி செல்லத் தயாராகி வருகின்றனர். காலை 9:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை பள்ளி செயல்படும்.

* அரசியலை தாண்டி நல்லாட்சி வழங்குவதாக தமிழக  முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பாராட்டு!

* அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சின் மனைவி காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழப்பு.

பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், ஓ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமி.

* ஓபிஎஸ் மனைவி மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி.

ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார்.

* நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

* சென்னை, அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் -பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

கருணாநிதி சிலை அமைக்க சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர்.

* குடிசை மாற்று வாரியம் இனி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும்-சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக செயல்படும் குடிசை மாற்று வாரியம்.

தமிழ்நாட்டில் 9 இடங்களில் 6000 குடியிருப்புகள் கட்ட திட்டம்.

ரூ.950 கோடி செலவில் குடியிருப்புகள் கட்ட முடிவு.

வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சி கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.

நெல்லை, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை ,தேனி, தென்காசி, திண்டுக்கல், சேலம் ,நாமக்கல் மாவட்டங்களில் குடியிருப்புகள் அமைக்க திட்டம்.

உலக வங்கி நிதி உடன் 6000 குடியிருப்புகள் அமைக்கப்படும்- வீட்டு வசதி வாரியம்.

* நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1 கோடியே 33 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திகளை இந்தியா புதிய சாதனை.

* மதுரையில் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்

* ஓபிஎஸ்ஸுக்கு சசிகலா நேரில் ஆறுதல்.

சென்னை பெருங்குடி மருத்துவமனை வந்த சசிகலா, ஓபிஎஸ் கையைப் பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.

ஆறுதல் தெரிவித்தபோது கண்கலங்கினார் சசிகலா.

* புதுச்சேரி சுகாதாரத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்-புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.

* திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் சமூகம் முன்னேற தமிழக அரசு சாதகமான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கும்-சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை.

* வெளிநாட்டை சேர்ந்த மாணவர்களின் விவரங்களை உடனடியாக வழங்க பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.

செப்.15-ம் தேதிக்குள் உயர்கல்வி நிறுவங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விவரங்களை வழங்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

அவசர தேவைக்காக தகவல் தேவை படுவதால் உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

* 2014 க்கு முன் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 105 டாலராக இருந்தது அப்போது பெட்ரோல் விலை ரூ.71 

தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை  71 டாலராக இருக்கும்போது  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 105 ஆக  உள்ளது.
ஏன் இந்த விலை ஏற்றம் ? - ராகுல் காந்தி கேள்வி.

* B.E., B.Tech கலந்தாய்வு தேதிகளில் மாற்றம்:

செப்.14-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

செப்.17 முதல் 24 வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு.

செப்.27 முதல் அக்.17 வரை பொதுக் கலந்தாய்வு-தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,509 பேருக்கு கொரோனா உறுதி.

1,719 பேர் குணமடைந்த நிலையில் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு.

பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.

வேறு மொழிகளில் படித்து, தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது- தமிழ்நாடு அரசு.

தனித் தேர்வர்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தாது.

தமிழ் வழியில் படித்ததற்கான கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரியாக ஆராய்ந்த பின்னரே, இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம்- தமிழ்நாடு அரசு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages