அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் விஜயலட்சுமி அம்மையார் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.- மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.
பொதுவாழ்க்கையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் முன்னேற்றத்திற்கு அனைத்து வகைகளிலும் துணை நின்றவர் திருமதி விஜயலட்சுமி அம்மையார் அவர்கள். விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர். 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது அவரது வீட்டுக்குச் சென்ற போது இதை நேரில் அனுபவித்தேன். அம்மையாரின் மறைவு ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
திருமதி விஜயலட்சுமி அம்மையார் அவர்களை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment