அக்னிப்புரட்சி இன்றைய (02.09.2021) முக்கிய செய்திகள்.
💥 காஷ்மீர் பிரிவினைவாத ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா கீலானி காலமானார்
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.08 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.38 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
💥 தமிழகத்தில் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
இதுவரை ரூ.3 லட்சமாக வழங்கப்பட்டு வந்த குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்வு.
செப்டம்பர் மாதம் முதல் மாதாந்திர பிடித்தம் ரூ.60-லிருந்து ரூ.110 ஆக உயர்வு - தமிழக அரசு.
* ஓடிடியில் வெளியான படங்கள் திரையரங்குகளில் இல்லை:
ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு.
💥 பம்பர் டூ பம்பர் காப்பீடு உத்தரவு நிறுத்திவைப்பு:
புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* பொதுத்துறை நிறுவனச் சொத்துக்களை மத்திய அரசு விற்கக் கூடாது-முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பொதுத்துறை நிறுவனச் சொத்துக்களை மத்திய அரசு விற்கக் கூடாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுச் சொத்துக்களை விற்பது தேச நலனுக்கு எதிரானது. மேலும், பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
💥 சமூக நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம்.
1987ம் ஆண்டு வன்னியர்கள் இடஒதுக்கீடு கேட்டு போராடி உயர் தியாகம் செய்த 21 சமூகநீதி போராளிகளுக்கு ₹4 கோடி மதிப்பீட்டில் விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு.
💥 தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.
32 சுங்கச்சாவடிகளை நீக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து வலியுறுத்தப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.
* கோடநாடு வழக்கு ஒத்திவைப்பு.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவு.
💥 அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு:
மறு தேர்வு எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்று, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்.
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மறு தேர்வு, வழக்கமான செமஸ்டர் தேர்வு எழுதிய பொறியியல் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம்.
மதிப்பெண் சான்றிதழ், விடைத்தாள் நகல் தேவைப்படுவோர் கல்லூரிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் மறு மதிப்பீடு கோருவோர், செப்.11 முதல் செப்.15ம் தேதிக்குள்ளாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
* பிள்ளையார் சதுர்த்தி நாளன்று, அதற்கு போட்டியாக ஊர்திகளில் ஜெப யாத்திரை நடத்துமாறு கிறித்துவர்களுக்கு அழைப்பு விடுத்த கோவை செயின்ட் பால் கல்லுாரி தலைவர் டேவிட் கைது
* புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளராக கிருத்திகா பாலகிருஷ்ணன் நியமனம்
* யூடியூப் சேனல்களில் பொய் செய்திகள் - உச்சநீதிமன்றம்.
யூடியூப் சேனல்களில் பொய்யான செய்திகள் அதிகமாக பரப்பப்படுகின்றன - உச்சநீதிமன்றம்.
யூடியூப் சேனல்கள் மற்றும் செய்தி இணையதளங்கள், பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவது குறித்து உச்சநீதிமன்றம் கருத்து.
💥 ஜல்லிக்கட்டு - நாட்டு மாடுகளை அனுமதிக்க உத்தரவு.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டும் அனுமதிக்க வேண்டும்; வெளிநாட்டு மாடுகளை போட்டியில் அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு.
💥 நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை
கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
உயர் அலுவர்கள் குழுவின் பரிந்துரை அடிப்படையில், புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை.
💥 தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற ஒன்றிய அரசுக்கு கோரிக்கை.
* கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைப்பு.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைப்பு.
கொடநாடு வழக்கில் புலன் விசாரணைக்கு உதகை நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் தனிப்படை அமைப்பு.
💥 பிரபல நடிகரும், இந்தி 'பிக் பாஸ்' சீசன் 13 வெற்றியாளருமான சித்தார்த் சுக்லா (40) மாரடைப்பால் உயிரிழந்தார்.
2005ஆம் ஆண்டு உலகின் சிறந்த மாடல் என்ற பட்டத்தையும் சித்தார்த் சுக்லா வென்றுள்ளார்.
அதன் பிறகு இந்தி 'பிக் பாஸ்' 13-வது சீசனில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.
💥 போலி பத்திரப்பதிவு - பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றம்.
போலியாக ஒருவர் பத்திரப்பதிவு செய்திருந்தால் அதனை நீதிமன்றம் மட்டுமே ரத்து செய்ய முடியும் என்ற நிலை மாற்றம்.
இனி பத்திரப்பதிவு தலைவரே, போலி
பத்திரப்பதிவை ரத்து செய்ய முடியும்.
💥 தமிழகத்தில் ரூ.218 கோடி மதிப்பில் புதிதாக 4 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள்.
சட்டப்பேரவையில் 18 அறிவிப்புகளை
வெளியிட்டார் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்.
💥 108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த ரூ.69.18 கோடியில் 188 புதிய வாகனங்கள் வாங்கப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிவிப்பு.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளரின் குடும்பங்கள் வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தில் ஆண்டுக்கு 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் செயல்படுத்தப்படும்.
சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு அலகு ஏற்படுத்தப்படும்.
‘சற்றே குறைப்போம்' திட்டத்தின் கீழ் சர்க்கரை, உப்பு, எண்ணெய் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு.
டெல்டா பிளஸ் குறித்து அறிய ரூ.4 கோடியில் சென்னையில் மரபணு பகுப்பாய்வு கூடம்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.
25 அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் தீவிர சிகிச்சை பிரிவு.
கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ குழு வாகனங்கள் இயக்கப்படும்.
💥 சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஆண் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாடுகளில் தளர்வு.
ஆண் பயணிகளும் அனைத்து நேரமும்
பயணிக்கலாம் - தெற்கு ரயில்வே.
ஆனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிப்பு.
💥 தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு
கொரோனா பாதிப்பு.
ஒரே நாளில் 20 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.
💥 உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றம்.
கொரோனா காரணமாக நேர நீட்டிப்பு செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு.
* இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.
இந்திய அணியில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் தாக்கூர் 57 ரன்களும், கேப்டன் விராட் கோலி 50 ரன்களும் எடுத்தனர்.
💥 காவல்துறை தாக்கியதில் விடுதி மேற்பார்வையாளர் உயிரிழப்பு!
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியை சேர்ந்த கட்டுச்சாமி என்பவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்துள்ள நிலையில் விடுதிக்கு திடீர் ஆய்வுக்கு (Raid) வந்த காவலர்கள் தாக்கியதில் பலியானார்.
இதை கண்டித்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் அவருடைய சடலம் வைக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை தரப்பில் பேச்சு நடைபெற்று வருகிறது.
💥 பொதுமக்கள் எந்தவித நேரக் கட்டுபாடுமின்றி மின்சார ரயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே போக்குவரத்துத் துறை அறிவிப்பு
* நியாயவிலைக் கடைகளில் பெண்கள் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்களாக பணியமர்த்தப்படுவதற்கான நடைமுறைகளை வெளியிட்டது கூட்டுறவுத்துறை.
No comments:
Post a Comment