அக்னிப்புரட்சி இன்றைய (05.09.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (05.09.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (05.09.2021) முக்கிய செய்திகள்.

💥 சென்னையில் பெட்ரோல் விலையில் 12 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் விலையில் 12 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

💥 சென்னை: பெருங்களத்தூர் அருகே இன்று அதிகாலை கோர விபத்து.
லாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழப்பு.

💥 இந்திய பாரம்பரியத்தில் இறைவனுக்கு சமமாக ஆசிரியர்கள் கருதப்படுகிறார்கள் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆசிரியர் நாள் வாழ்த்து.

தலைசிறந்த கல்வியாளர், தத்துவஞானி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் முன்னிலை வகிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் தருணமாக ஆசிரியர் தினம் அமைகிறது.

💥 பாராலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் சுகாஸ் யாதிராஜுக்கு வெள்ளிப் பதக்கம்.

இறுதி போட்டியில் பிரான்ஸ் வீரர் லூக்காஸ் மசூரிடம், சுகாஸ் யாதிராஜ் தோல்வி.

💥 கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸுக்கு 12 வயது சிறுவன் உயிரிழப்பு.

நிபா வைரஸ் கண்டறியப்பட்டதால் கேரளாவுக்கு சிறப்புக் குழுவை அனுப்பி வைத்தது மத்திய அரசு.

💥 UPSC, TNPSC, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும்
:தமிழக அரசு அறிவிப்பு

💥 கேரளா மாநிலம்  கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் 12 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு

💥 பாராலிம்பிக் Badminton ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் நாகர் கிருஷ்ணா தங்கப் பதக்கம் வென்றார்

பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் நாகர் கிருஷ்ணா தங்கம் பதக்கம் வென்றார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 19 பதக்கங்களை வென்றுள்ளது.

* தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைப் போட்டி!

தற்போது வரை வங்க மொழி முதலிடத்திலும் தமிழ் இரண்டாம் இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் கட்டுரை எழுதி இந்த ஆண்டு தமிழ் முதலிடம் பெற உதவலாம். விவரமாக அறிய:
ta.wikipedia.org/s/acij

* நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்தேன்” - தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட்.

* தொடக்கப் பள்ளி என்பது மிகமிக அவசியம்; தொடக்கப் பள்ளிகளை திறப்பது குறித்து 8 ஆம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

💥 நிபா வைரஸ் எதிரொலி - தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு.

கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர்களுக்கு தீவிர பரிசோதனை.
தமிழகம் பாதுகாப்பான நிலையில் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

💥 கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது டோக்கியோ பாராலிம்பிக்.

பதக்கப்பட்டியலில் 207 பதக்கங்களுடன் சீனா முதலிடமும், 19 பதக்கங்களுடன் இந்தியா 24வது இடமும் பெற்றுள்ளன.

பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை!

கடந்த 1968 முதல் 2016 வரை நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகள் அனைத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாகவே  இந்தியா 4 தங்கங்களுடன் 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்த நிலையில், தற்போது இதுவரை இல்லாத வகையில், 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் உள்பட 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

#Shooting                   
🥇🥉Avani 
🥇Manish 
🥈🥉Singhraj

#Athletics  
🥇Sumit
🥈Nishad
🥈Yogesh
🥈Devendra 
🥈Mariyappan
🥈Praveen
🥉Sundar
🥉Sharad

#TableTennis  
🥈Bhavina

#Archery  
🥉Harvinder

#Badminton  
🥇Pramod
🥉Manoj
🥈Yathiraj
🥇Krishna

* இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி.

தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பிலிருந்த 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

💥 இந்திய விளையாட்டு வரலாற்றில் டோக்கியோ பாராலிம்பிக்கிற்கு சிறப்பு இடம் உண்டு - பிரதமர் மோடி.

டோக்கியோ பாராலிம்பிக் ஒவ்வொரு இந்தியனின் நினைவிலும் என்றும் நீங்காமல் இருக்கும்.

வரும் தலைமுறையினர் விளையாட்டை தேர்ந்தெடுக்க டோக்கியோ பாராலிம்பிக் ஊக்கமாக அமைந்துள்ளது.

பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், வீரர்களின் உறவினர்களுக்கு பாராட்டுகள் - பிரதமர் மோடி.

💥 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் மாரியப்பன்.

வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த மாரியப்பனை வாழ்த்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

குரூப் 1 பிரிவில் வேலை, தமிழ்நாடு பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனுக்கு அங்கீகாரம், வீரர்களுக்கு தொடர் பயிற்சி போன்ற கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வலியுறுத்தினார் மாரியப்பன் தங்கவேலு.

சந்திப்பின் போது, பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,592 பேருக்கு கொரோனா: 18 பேர் பலி: 1,607 பேர் டிஸ்சார்ஜ்-சுகாதாரத்துறை.

* மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித்து செப். 20 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு.

அவரவர் வீடுகளின் முன் கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம்.

வேளாண் சட்டம், பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை, தனியார் மயமாக்கல் உள்ளிட்டவற்றை கண்டித்து போராட்டம் - திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages