அக்னிப்புரட்சி இன்றைய (08.09.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (08.09.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (08.09.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

* சபரிமலை ஐயப்பன் கோயிலில் செப்டம்பர்  16ஆம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. 

செப்டம்பர் 17-21ஆம் தேதி வரை பக்தர்கள்  தரிசனம் செய்ய அனுமதி.

இன்று மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் -தேவசம்போர்டு அறிவிப்பு.

* மெக்சிகோவில் நிலநடுக்கம்:
மெக்சிகோ நாட்டின் குரோரோ பகுதியில் இன்று காலை 7.17 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு.

* தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை:

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை.

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்  இன்று ஆலோசனை.

பள்ளிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்.

* ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உயரதிகாரிகளுடன் இன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனை.

ஊரடங்கை நீட்டிக்கும்போது கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? தளர்வுகள் வழங்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

* கவிஞர் புலமைப்பித்தன் (85) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

வயது முதிர்வு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக தமது 85 ஆவது வயதில் காலமானார்.

* குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், மதநல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று பேரவை கருதுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம், அகதிகளாக வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல் மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொருத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்கவும்,  மதசார்பின்மை கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.

ஆதிதிராவிடர் நல ஆணையம் உருவாக்கப்படும்.

மாநில அளவில் ஆதிதிராவிடர் நல ஆணையம் உருவாக்கப்படும் - பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

* ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் கட்டப்படும்.

1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.23.28 கோடி செலவில் 90% மானியம் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் 20 சமுதாயக் கூடங்கள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதி, விழுப்புரம், திண்டிவனம் மற்றும் சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு புதிய கட்டிடங்கள் 10.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்- அமைச்சர் கயல்விழி.

* சசிகலாவின் பையனூர் பங்களா முடக்கம்:

சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ₹100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா சொத்தை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை.

ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்த நிலையில், பினாமி சொத்து சட்டத்தின் கீழ் சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

* செப். 18-ம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் tnpsc.gov.in இணையதளத்தில் வெளியீடு- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.

* 259 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே ரூ.50 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும். - அமைச்சர் சிவசங்கர்

40 விடுதிகளுக்கு ரூ.10 லட்சம் செலவில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்படும்- அமைச்சர் சிவசங்கர்.

234 கள்ளர் பள்ளி கட்டடங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கழிப்பிட வசதிகள் ரூ. 4 கோடியே 68 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

15 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும்

அனைத்து கள்ளர் தொடக்கப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் ஆங்கில வழியிலான வகுப்புகள் தொடங்கப்படும்.

சிறப்பாக செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களால் ரூ.50 ஆயிரம் செலவில் விருதுகள் வழங்கப்படும்.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 8 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் மற்றும் தனித்திறன் வளர்க்கும் பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்.

* நெய்வேலி விமான நிலையத்தில் விமானங்களை இயக்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளன.

விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் உரிமம் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் விமானங்கள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு.

* சென்னையில் 66 சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் பயன்பாடு குறைந்து இழப்பு ஏற்பட்டதால் 144 சிறிய பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

* உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க கூடாது.

பள்ளிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் மீண்டும் அறிவுறுத்தல்.

1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வரும் 14ஆம் தேதி ஆலோசனை.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.

* சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஜெருசலேம் புனித பயணத்திற்கு வழங்கப்படும் மானியம் 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

வக்பு வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் உயர்த்தப்படும்.

14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் ரூ.14 லட்சம் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும்.

சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு வருமான வரம்பு 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 1,594 பேர் டிஸ்சார்ஜ்.

18 பேர் உயிரிழந்த நிலையில்; தற்போது 16,180 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

* ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் நியமனம் - தமிழக அரசு.

* டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், சமி.

ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளனர்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  மகேந்திர சிங் தோனி, டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கான வழிகாட்டியாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages