அண்டம் கிடுகிடுங்க வந்த கொரோனாவும், அனைத்தும் அடங்கி ஓடிய கட்டியக்காரன் மற்றும் பொது மக்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல் - Agnipuratchi

அண்டம் கிடுகிடுங்க வந்த கொரோனாவும், அனைத்தும் அடங்கி ஓடிய கட்டியக்காரன் மற்றும் பொது மக்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்

Share This

அண்டம் கிடுகிடுங்க வந்த கொரோனாவும்,  அனைத்தும்
அடங்கி ஓடிய கட்டியக்காரன் மற்றும் பொது மக்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்

கொரோனா பரவல் அச்சுறுத்தல் மீண்டும் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மும்பை மாநகரில்  கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  தமிழ்நாட்டிலும் நேற்று ஒரே நாளில் தினசரி கொரோனா பாதிப்பு 43 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் திறக்கப்பட்ட பள்ளிக்கூடங்களிலும் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடுமையான  அச்சம்  ஏற்பட்டிருக்கிறது.

இதை அடிப்படையாக வைத்து, ஒரு கிராமப்புற தெருக்கூத்து வடிவத்தில் சிறிய உரையாடல்:
======================
ஒரு  கிராமத்தில்   தெருக்கூத்து  நடைபெற்றுக் கொண்டிருந்தது.

தெருக்கூத்தில் வரும் கட்டியக்காரன்  தனது காட்சிக்காக தயாராக நின்று கொண்டிருந்தார்.  அந்த நேரத்தில்  சூரன் கையில் வாளுடன் சீறிப்பாய்ந்து வந்தார்.

கட்டியக்காரனைப் பார்த்து , ‘’ நான் யார் தெரியுமா?”” என்று  ஆவேசமாக முழங்கினார் சூரன்.

அதைக் கேட்ட கட்டியக்காரன், ‘’ சொன்னால் தானே தெரியும்... சொல்லுங்கள் நீங்கள் யார்?” என்று சூரனைப் பார்த்து நக்கலாகக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த சூரன்,’’ அண்டம் கிடுகிடுங்க, அகிலம் நடுநடுங்க  ஈரேழு உலகத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நான் தான். உங்களுடன் வாழவே  இங்கு வந்திருக்கிறேன்” என்றார்.

சூரனின் வாய் மூட வில்லை.... அதற்குள்ளாக கட்டியக்காரன்  குளிர்ஜுரம் வந்தவனைப் போல, உடல் முழுவதும் துணியை இழுத்துப் போர்த்திக் கொண்டு அங்கேயே மயங்கி விழுந்து கிடந்தான்.  மத்தளக் காரர், தாளக் காரர், பின்பாட்டு பாடுபவர் என அனைவரும் மேடையில் இருந்த பெஞ்சுக்கு கீழே பதுங்கிக் கொண்டிருந்தனர்.

தெருக்கூத்து பார்க்க வந்திருந்த மக்கள் எங்கே என்று தேடினால், அனைவரும் துண்டைக் காணோம்...  துணியைக் காணோம்  என்று ஓடி விட்டிருந்தனர். ஒருவரைக் கூட காணவில்லை.

தெருக்கூத்துப் பார்க்க வந்து, கொரோனா அச்சத்தால் கலைந்து ஓடும் கூட்டத்தில்  ஓர் இணையர் நிகழ்த்திய உரையாடல் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது.

கணவன்: நல்ல வேளைம்மா.... நாம நமது புள்ளைங்களை இங்கு கூட்டிட்டு வரலை. வந்திருந்தா பாவம் அவங்க பயந்து போயிருப்பாங்க.

மனைவி: நீங்க சொல்றது சரிதாங்க. ஆனால், அவங்க ரொம்ப விழிப்புடன் தான் இருக்காங்க. நம்மைக் கூட முகக்கவசம் அணிந்து போகும்படி  சொன்னாங்க. ஆனால், நாமதான் கேட்கவில்லை. இனியாவது புள்ளைங்க சொல்றதைக் கேட்போம்.
=================================
கொரோனா குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள  விழிப்புணர்வு மகிழ்ச்சியளிக்கிறது.  அதே விழிப்புடன் கொரோனா விதிகளை பின்பற்றுங்கள்.... கொரோனாவைத் தவிருங்கள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages