அக்னிப்புரட்சி இன்றைய (09..09.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
* டோக்கியோ பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி!
💥 தமிழ்நாடு ஆளுநர் மாற்றம் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்
ஆர்.என்.ரவி தற்போது நாகலாந்து ஆளுநராக உள்ளார்
பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்
💥 தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் சாலையில் சில்லாநத்தம் பகுதியில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது தண்ணீர் லாரி மோதி பயங்கர விபத்து.
3 பெண்கள் சம்பவ இடத்தில் பலி; டிரைவர் உள்ளிட்ட 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
* திட்டமிட்டபடி விற்பனையை தொடங்காததற்கு மன்னிப்பு கோரியது ஓலா நிறுவனம்
* தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் BVSc , Animal Husbandry, B. Tech படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி அக்டோபர் 8, மேலும் தகவல்களுக்கு tanuvas.ac.in இந்த முகவரியை க்ளிக் செய்யவும்.
* உலகின் நெ.1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் யு.எஸ் ஓபனில் அரையிறுதிக்கு தகுதி.
இத்தாலிய வீரர் மேட்டியோ பெரெட்டினியை 5-7, 6-2, 6-2, 6-3 செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார்.
* மணல் எடுக்க அனுமதி தேவையில்லை:
மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம்.
மணல் எடுப்பதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் - துரைமுருகன்.
💥 தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4 ம் தேதி நடக்கும் என அறிவிப்பு - வரும் 15ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
அதிமுகவின் வைத்தியலிங்கம், முனுசாமி ராஜினாமா செய்ததால் காலியிடம் ஏற்பட்டது.
வைத்தியலிங்கத்திற்கான இடத்தில் தேர்வாகும் உறுப்பினர் 2022 ஜூலை வரை ஓராண்டு வரையும், கே.பி.முனுசாமிக்கான இடத்தில் தேர்வாகும் உறுப்பினர் 2026 ஏப்ரல் வரை 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.
💥 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் நீங்கவில்லை - திமுக எம்.எல்.ஏ சுதர்சனம்.
நீதிமன்றத்தில் அது தொடர்பாக வழக்கு உள்ளதால் பேரவையில் பேசுவது முறையல்ல - எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
ஜெயலலிதாவின் மரணம் குறித்த கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் - இ.பி.எஸ்.
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றே உறுப்பினர் பேசினார்; வழக்கின் உள்ளே செல்லவில்லை, அதனால் அவைக்குறிப்ப்பில் இருந்து நீக்க தேவையில்லை - முதலமைச்சர்.
* நடப்பாண்டில் மாணவர் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதால், அரசு கல்லூரிகளில் 25% கூடுதல் சேர்க்கை நடத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் கலை & அறிவியல் கல்லூரிகளில் 15% கூடுதல் மாணவர் சேர்க்கையை நடத்த முயற்சி எடுக்கப்படுகிறது - அமைச்சர் பொன்முடி.
* காவல்துறையின் அனைத்து முயற்சிகளும் மனிதாபிமானத்துடன் நட்புறவோடு பொதுமக்களை அணுகும் குறிக்கோள்களை நோக்கியதாக இருத்தல் வேண்டும்.
தகுந்த திட்டமிடல் மற்றும் முறையான முயற்சிகள் மூலமாக இத்தகைய குறிக்கோள்களை தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் எட்டும் என்ற நம்பிக்கை அரசுக்கு உள்ளது.
பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழ்நாடு காவல்துறைக்கு இந்த அரசு எப்போதும் வழிகாட்டியாகும் உறுதுணையாகவும் திகழும்- காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
💥 பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கான் தலைநகர் காபூலில் பெண்கள் உட்பட பலர் போராட்டம்
காபூல் நகரில் பெண்கள் நடத்திய போராட்டம் குறித்த செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்களை சிறைபிடித்து கடுமையாக தாலிபான்கள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது
💥 கொற்கை, சிவகளை ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை காட்சிப்படுத்த திருநெல்வேலியில் 15 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேரவையில் அறிவிப்பு.
பண்டைய நாகரிகம் கொண்ட மண் தமிழ்நாடு என்பதற்கு தொல்லியல் சான்றுகள் உள்ளன. 1990 ல் கடல்சார் ஆய்வுக்கு பெரும் திட்டம் தீட்டியதும், பூம்புகாரில் கடலுக்கு அடியில் சில கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டதும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தான் :முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம்.
💥 RTO அலுவலகத்திற்கு நேரில் வராமல் இணைய வழியிலேயே LLR, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்து கொள்ளும் வசதிகள் செயல்படுத்தப்பட உள்ளதாக, அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்
💥 தமிழர்கள் பண்பாட்டு முறை தோன்றிய காலம் 2000 ஆண்டுகளுக்கு முன் என இருந்ததை அண்மைய அகழாய்வில் கிடைத்த அறிக்கையின்படி 3200 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது தமிழர் பண்பாடு என்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
💥 இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்படவேண்டும் - : முதல்வர் முக ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அது தமிழ் இனத்தின் ஆட்சியாக இருந்திருக்கிறது!
வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை அமைத்தது, தமிழ் வாழ்க என எழுத வைத்தது, தமிழ் வழிபாட்டு உரிமை வழங்கியது, தமிழை கணினி மொழியாக்கியது, உலகம் முழுவதும் தமிழை பரப்பியது, செம்மொழி மாநாடு நடத்தியது என தமிழ் அரசை நடத்தியது தான் திமுக அரசு - முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேச்சு
சிவகளையில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இருந்த நெல் மணிகள் காலம், அமெரிக்க பீட்டா ஆய்வு மையத்தில் கார்பன் டேட்டிங்க சோதனையில் கிமு 1155 என்று கண்டுபிடிக்கப்படுள்ளது : முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு.
💥 நடுவண் அரசு வெளியிட்டுள்ள நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை IIT முதலிடம்
பொருநை ஆற்றங்கரை நகரிகம், தமிழ்ப் பண்பாட்டின் தொடக்கம் - தமிழக அரசு வெளியிட்ட வீடியோ
* இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி ரத்து.
ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பிசிசிஐ அறிவிப்பு.
💥 நலிவடைந்தவர்களையும், ஏழைகளையும் மேம்படுத்துவதற்காகத் தான் வரிவிலக்கு இருக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.
இந்திய இசை கருவிகளுக்கு வரி விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு.
இசைக்கருவிகளை தயாரிக்கின்ற ஏழ்மை நிலையில் இருக்கின்ற கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவே வரிவிலக்கு வழங்கப்படுகிறது - தமிழ்நாடு அரசு.
வரிவிலக்கு அளிப்பதை வழக்கமாக பின்பற்றினால், பெரிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட வகை செய்துவிடும் - நீதிபதி.
* கோடநாடு விவகாரம் - பேரவையில் முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம்:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டில் இருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா அலுவல் பணிகளை மேற்கொண்ட இடத்தில் சிசிடிவி எப்படி அகற்றப்பட்டது?
கோடநாடு இல்லத்தில் கொலை, கொள்ளை நடந்தபோது ஏன் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை?
கொலை, கொள்ளை நடந்த கோடநாடு சாதாரண இடமில்லை; அந்த குற்றங்களை எதில் சேர்ப்பது?
கோடநாடு கொலை, கொள்ளை விசாரணைக்கு தடைகேட்டு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது ஏன்? - முதல்வர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தனியாரிடம் சென்ற கோடநாடு சொத்துக்கு எப்படி பாதுகாப்பு தரமுடியும்?
புலன் விசாரணை வேண்டாம் என
கூறவில்லை, வழக்கை நடத்துங்கள்.
கோடநாடு சம்பவம் குறித்து முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வழக்கிற்கு நாங்கள் தடை கேட்கவே இல்லை, எங்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்புமில்லை- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
* காவல்துறையினருக்காக உங்கள் இல்லம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
உங்கள் இல்லம் திட்டத்தில் வீடுகள் தரமானதாக இல்லை. பலர் முன்பணம் செலுத்தியும் வீடுகள் வழங்கப்படவில்லை. நீங்கள் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக அதை கைவிட மாட்டோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
💥 சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
10 ஆண்டு காலம் ஆட்சியிலிருந்தபோது நீங்கள் செய்யவில்லை. பேரவை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும்போது ஒளிபரப்பு செய்வோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
💥 இந்தியாவில் கார் தயாரிப்பை நிறுத்துகிறது Ford.
மறைமலை நகர் தொழிற்சாலையை மூட முடிவு
மறைமலை நகர் போர்ட் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் சுமார் 2000 பேரும் குஜராத் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் 2000 பேரும் என சுமார் 4000 தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும்
💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,596 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 1,534 பேர் குணமடைந்த நிலையில் 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
💥 2,207 முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு.
செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 17 வரை விண்ணப்பிக்கலாம்.
நவம்பர் 13,14,15 தேதிகளில் தேர்வு நடத்தப்படும்; 69% இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும், நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் நடைபெறும்- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
💥 ஆகஸ்ட் மாதம் நடந்த 12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான முடிவுகள் வரும் 13ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் - பள்ளிக்கல்வித்துறை.
💥 வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு:
2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய நேரடி வரிகள் வாரியம்.
💥 தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் சிறப்புக் குழு அறிக்கை அளித்துள்ளது.
3 வது அலை உருவாவதை தடுக்க பொதுமக்கள் பண்டிகைகளை தங்களது இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்.
பொதுமக்கள் அதிகமாகக் கூடும் திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அக்டோபர் 31 வரை தடை நீட்டிப்பு.
கொரோனாவை தடுக்கும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி 3வது அலை தமிழ்நாட்டில் ஏற்படாத வண்ணம் தடுக்க உதவ வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
💥 நீடிக்கும் வருமான வரித்துறையின் அலுவல் இணையதள பிரச்னை காரணமாக ITR Filing காலக்கெடு 31.12.2021 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக நடுவண் நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு.
💥 அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள்/ கணினி பயிற்றுநர்/ உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்
* பேரவையில் காரசார விவாதம்!
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது அதிமுக ஆட்சியில் தானே - நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்
தவிர்க்க முடியாத காரணுங்களுக்காக நடைபெறும் துப்பாக்கிச்சூட்டிற்கு காவல்துறை பொறுப்பேற்காது என 1998 ல் கூறியவர் உங்கள் தலைவர் கருணாநிதி தான். - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
No comments:
Post a Comment