அக்னிப்புரட்சி இன்றைய (11.09.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
* உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் யுஎஸ் கிரான்ட் ஸ்லாம் போட்டியில் இறுதி சுற்றுக்கு தகுதி.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனின் அலெக்சாண்டர் ஸ்வெரெவை 4-6, 6-2, 6-4, 4-6, 6-2 என்கிற செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார்.
💥 அமெரிக்காவில் 9/11 தாக்குதல் நடந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.
அமெரிக்காவில் 9/11 தாக்குதல் என்றால் பெரும்பாலானோருக்கு இரட்டை கோபுர தாக்குதல் தான் நினைவுக்கு வரும்.
அன்றைய தினம் கடத்தப்பட்டது மொத்தம் நான்கு விமானங்கள். மற்ற இரண்டு விமானங்களை வைத்து பயங்கரவாதிகள் போட்ட திட்டம் அமெரிக்காவின் அடிநாதத்தையே அசைத்துப் பார்த்தது.
அமெரிக்காவில் 9/11 தாக்குதல் நடந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.
சர்வதேச அளவில் மிகவும் மோசமான, அதிக விளைவுகளை ஏற்படுத்திய பயங்கரவாத தாக்குதல் என்றால் அது இரட்டை கோபுர தாக்குதல் தான்.
இந்த நான்கு சம்பவங்களில் மொத்தம் 2996 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.
எந்தவொரு அமெரிக்கராலும் எப்போதும் மறக்க முடியாத, அமெரிக்க வரலாற்றில் கறுப்பு நாளாகப் பதிந்தது செப்டம்பர் 11ஆம் தேதி.
* மகாகவி பாரதியாரின் 100வது நினைவு நாளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் புகழுரை.
* மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மற்ற தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தால் எழுவரை அன்றே விடுதலை செய்திருப்பார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
💥 செப்டம்பர் 3 வரை பல்வேறு மாநிலங்களில் கோவிட் தடுப்பூசி போடப்பட்ட நிலவரம்
அதிக அளவிலான தடுப்பூசி போடப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் கடைசி 5 இடங்களுக்குள் தான் தமிழகம் உள்ளது.
இத்தனை மாதங்கள் கடந்த பின்னும் வெறும் 27% மக்கள் தான் முதல் தடுப்பூசியை பெற்று உள்ளனர்.
💥 பொதுப்பணித்துறையில் மிக நேர்மையான அலுவலர் என்று பெயர் பெற்ற கட்டுமானப் பிரிவு இணைத் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி சென்னையிலிருந்து மதுரைக்கு "திடீர்" பணியிடமாற்றம்
💥 பிரான்ஸ் தலைநகரம் பாரிசை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு நடுவர் நீதிமன்றத்தின் தெற்காசிய பெருநில (South Asian Regional) இயக்குநராக வழக்கறிஞர் தேஜஸ் செளவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பதவியை வகிக்க உள்ள இரண்டாவது இந்தியர் தேஜஸ் செளவுகான்
💥 பள்ளிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? எத்தனை பேர்? என்ற விவரத்தை நாளும் பகல் 1 மணிக்கு தரவுகளை வழங்க, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை ஆணை
* அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட ஒரு மணித்துளி கூட மது விற்பனை செய்யப்படமாட்டாது என அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
விற்பனை நேரம் முடிவடைந்த பிறகு கூடங்களில் மது விற்பனை செய்யப்படாது என முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
* இந்தோனேசிய சிறைச்சாலையொன்றில் கடந்த செப்டம்பர் 8 (புதன்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 44 கைதிகள் பலியாகியிருக்கிறார்கள் என தகவல்
💥 ஆகஸ்ட் மாதம் நடந்த 12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான முடிவுகள் வரும் 13ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும். - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
💥 நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MD, MS படிப்புகளில் சேருவதற்கான NEET - PG தேர்வு தொடங்கியது
260 நகரங்களில் 800 மையங்களில் CBT முறையில் நடத்தப்படும் தேர்வை 1.74 லட்சம் பேர் எழுதுகின்றனர். அக்டோபர் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாக வாய்ப்பு.
* தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து சென்னை திரும்பினார்.
ஆகஸ்ட் 30ல் துபாய் சென்ற நிலையில் மனைவி பிரேமலதா, மகன் சண்முகப்பாண்டியனுடன் திரும்பினார்.
* குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா.
ஆளுநரிடம் தனது ராஜிராமா கடிதத்தை வழங்கினார் விஜய ரூபானி.
அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராஜினாமா.
💥 3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்-அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.
சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர வரும் 30ம் தேதி வரையிலும், இதர சட்டக் கல்லூரிகளில் சேர அக்டோபர் 6ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
* நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்:
நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
💥 தமிழகத்தில் ஒரே நாளில் 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
கொரோனா தொற்றிலிருந்து இன்று 1,517 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 27 பேர் இன்று உயிரிழப்பு.
தற்போது 16,399 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
💥 பாரதியாரின் பெயரில் தமிழ் இருக்கை!
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியாரின் பெயரில் "தமிழ் இருக்கை" அமைக்கப்படும். - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு...
* இம்மானுவேல் சேகரன் குருபூசையை முன்னிட்டு போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆணை
* உத்தரகண்ட்டில் மிதமான நிலநடுக்கம்! உத்தரகண்ட் ஜோஷிமாத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.6-ஆக பதிவாகியுள்ளது
💥 பத்திரப்பதிவு துறையில் முறைகேடாக பதிவு நடந்தால் சார்பதிவாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு
முறைகேடு செய்வோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்ட முன்வரைவு கொண்டுவரப்படும். முறைகேட்டில் தொடர்புடைய பிற துறையை சேர்ந்தவர்களுக்கும் 7 ஆண்டு சிறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். - அமைச்சர் மூர்த்தி
💥 10, 11ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி.
கொரோனா பரவல் காரணமாக தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
No comments:
Post a Comment