அக்னிப்புரட்சி இன்றைய (13.09.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
💥 வாணியம்பாடியில் ம.ஜ.க நிர்வாகி வாசிம் அக்ரம் படுகொலை விவகாரத்தில் நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம்.
தலைமறைவாக உள்ள டீல் இம்தியாஸ் உள்பட இருவரை கைது செய்யாததால், மஜக நிர்வாகி கொல்லப்பட்டார்.
💥 B.Ed படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
7 அரசு மற்றும் 14 உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed படிப்பில் சேர இன்று முதல் வரும் 22ம் தேதி வரை tngasaedu.in tngasaedu.org என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்- கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.
💥 அமெரிக்க ஓபன்: பட்டம் வென்றார் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ்.
ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யா வின் டேனில் மெட்வடேவ் மற்றும் உலகின் நம்பர் ஒன் வீரர் செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் மோதினர்.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய மெட்வடேவ், 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இது அவருக்கு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்.
கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
💥 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) துணைத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11.00 மணிக்கு வெளியீடு
💥 இன்றுடன் சட்டப்பேரவை நிறைவு : NEET தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்
* தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நன்றி: நான்கு ஆண்டுகால பணியினை அறிக்கையாக பகிர்ந்து கொண்டார்
💥 கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வெளியிடும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை.
💥 தில்லி திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் கைதிகள் சிலர் காயமடைந்துள்ளனர்
திகார் சிறையில் 3-வது பிரிவில் நடந்த மோதல் தொடர்பாக கைதிகள் மீது 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்த பட்டு வருகிறது
💥 NEET தேர்வு அச்சம் காரணமாக சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை - அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய கருப்பு பட்டை அணிந்து பேரவை நிகழ்வில் பங்கேற்பு
💥 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்புப் பட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷ் மறைவுக்காகவும், வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வெட்டிக் கொல்லப்பட்டதற்காகவும் கருப்பு பட்டை அணிந்து வந்ததாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகவல்.
கஞ்சா விற்பனை குறித்து காவல் துறையில் புகாரளித்த வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம்.
கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
நீட் ரத்து என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி தேர்வை எதிர்கொள்ள முடியாததால் மாணவர் தனுஷ் தற்கொலை-எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்.
💥 அதிமுக ஆட்சியில் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தீர்கள் நீட் விலக்குக்காக நிபந்தனை விதித்திருக்கலாம், அந்த திராணி அதிமுகவுக்கு இல்லை -முதலமைச்சர்.
நீட் தேர்வு தொடர்பாக இன்று பேரவையில் மசோதா கொண்டு வருகிறோம்; சட்டத்தை எதிர்க்கட்சியும் இணைந்து நிறைவேற்றித்தர வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
* சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு.
நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது; எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்த நிலையில் அதிமுக வெளிநடப்பு.
💥 நீட் தேர்வுக்கு விலக்கு - மசோதா தாக்கல்.
நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதா. சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
💥 12ம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்றும் வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் +2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வலிமையான சட்ட முன்வடிவை பேரவையில் முன்மொழிகிறேன்- முதலமைச்சர் ஸ்டாலின்.
கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது.
சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலை நிறுத்தவும், மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் நீட் விலக்கு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.
நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது; சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின், பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது.
நீட் தேர்வு காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையும் கனவுகளும் தகர்ந்துள்ளது.
நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
நுழைவுத்தேர்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்த அரசுதான் திமுக அரசு; தொடக்கத்திலிருந்தே திமுக நீட் தேர்வை எதிர்த்து வருகிறது - நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை தாக்கல் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
💥 திமுக அறிக்கையால் மாணவர்கள் குழப்பம்- எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேட்டி.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தது - வெளிநடப்பு செய்த பின்பு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேட்டி.
திமுக அறிக்கையால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற அதிமுக அரசு அனைத்து சட்டப்போராட்டங்களையும் நடத்தியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்து நீட் தேர்வில் இருந்து எப்படி விலக்கு பெற முடியும்?
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் மட்டுமே நீட்டுக்கு விலக்கு கேட்கிறது.
தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு தயாராகாமல், தற்போது தேர்வு எழுத முடியாத அச்சத்தில் மாணவர் தனுஷ் உயிரிழந்துள்ளார் - எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
💥 செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
💥 ஜெயலலிதா மரண விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு.
இந்த ஆட்சியில் வன்முறை, சாதி சண்டைகள், துப்பாக்கிச் சூடு, அராஜகம் ஆகியவை இல்லை.
இதை ஏற்படுத்திக் கொடுத்த காவல் துறைக்கு நன்றி. கொரோனா பேரிடரில் உயிரை பணயம் வைத்து பாதுகாத்தார்கள்.
அவர்கள் பணிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
💥 விரைவில் காவல்துறை ஆணையம்:
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் பதிலுரை.
காவல்துறையினரின் நல்வாழ்வுக்காக எப்போதும் செயல்படும் அரசு திமுக அரசு.
கடந்த ஆட்சியில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்தார்களே தவிர, பாராமரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது தனியாக நிதி ஒதுக்கி கேமராக்களை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புகார் எழுந்ததும் எவ்வித தயவு தாட்சண்யம் காட்டாமல் யாராக இருந்தாலும் இந்த அரசு கைது செய்யும் நடவடிக்கையை எடுக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
காவல்துறை மானியக் கோரிக்கையில் புதிய அறிவிப்புகள்.
போலீசார் பேருந்துகளில் பயணிக்க வசதி- முதல்வர் ஸ்டாலின்.
சுற்றுலா காவல் துறை அமைக்கப்படும்.
மாநில இணையதள குற்றப்புலனாய்வு மையம் சென்னையில் அமைக்கப்படும்.
💥 5 சவரன் நகை கடன் தள்ளுபடி : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி.
தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
💥 நாட்டின் பாதுகாப்பு கருதி பெகாஸஸ் உளவு விவகாரத்தில் விரிவான தகவல்களைக் கொண்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாது.
குறிப்பிட்ட மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா? என்பதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது - பெகாஸஸ் உளவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்.
💥 7 அரசு மற்றும் 14 உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed படிப்பில் சேர இன்று முதல் வரும் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
💥 திருச்சி, மதுரையில் புதிதாக ₹5.49 கோடி செலவில் கணினி தடயவியல் பிரிவு தொடங்கப்படும்
அரியலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நடமாடும் தடய அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு
💥 வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது
எண்ணூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி , புதுச்சேரி துறைமுகங்களில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
💥 காவலர் முதல் ஆய்வாளர் வரை பேருந்தில் கட்டணமின்றி பயணம் செய்ய நவீன காவலர் அடையாள அட்டை வழங்கப்படும் : முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
💥 சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வது விரைவில் நிறைவேற்றப்படும்: முதல்வர் உறுதி
அரசிடம் நிதியில்லை, ஆகவே சட்டமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்ப முடியாது என உயர்நீதிமன்றத்தில் கூறியது அதிமுக ஆட்சி :முதலமைச்சர் முக ஸ்டாலின் குற்றச்சாட்டு
💥 ஆவடி, தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் : முதலமைச்சர் முக ஸ்டாலின்
💥 கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.!
: முதலமைச்சர்
போட்டித் தேர்வுகள் கல்வியின் தரத்தை நிர்ணயிக்க முடியாது. அப்படியிருக்க NEET தேர்வினால் கல்வித் தரம் உயரும் என கூறுவது முற்றிலும் தவறானதாகும். : முதல்வர் முக ஸ்டாலின்
💥 வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு 95 ஆறுகளை தூர்வாரும் பணிக்காக ₹11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
💥 அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 30% லிருந்து 40% ஆக அதிகரிப்பு செய்யப்படும்
அரசு பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும்.
அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை. - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
* உதயநிதிக்கு புதிய பொறுப்பு:
அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நியமனம்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
அண்ணாமலை பல்கலைக் கழக ஆட்சி மன்ற உறுப்பினராக எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் நியமனம்.
கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோர் நியமனம்.
💥 ஊரக உள்ளாட்சி தேர்தல் 06.10.2021, 09.10.2021 அன்று இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவிப்பு.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி,
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்கள்.
6-10-2021 மற்றும் 09-10-2021 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்குகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்:
அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்.
9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
9 மாவட்டங்களிலும் அக்.16ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.
💥 துப்பாக்கிச்சூடு - கூடுதல் இழப்பீடு வழங்குக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு - சென்னை உயர்நீதிமன்றம்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த கூடாது - நீதிபதிகள்.
💥 NEET தேர்வுக்கு எதிரான சட்ட முன் வரைவு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறியது
NEET தேர்வில் இருந்து விலக்கு பெறும் தமிழக அரசின் சட்ட முன்வரைவுக்கு அதிமுக ஆதரவு அதிமுகவுக்கு முதலமைச்சர் நன்றி!
* NEET தேர்வுக்கு எதிரான சட்ட முன் வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு
* குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவி ஏற்றார்.
அவரோடு புதிய அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் மேற்கொண்டது.
* பெகாசஸ் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் வழங்க தேவையில்லை என்ற நடுவண் அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறோம் என்று கூறியதால் மட்டுமே கூடுதல் காலம் வழங்கினோம் என உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
💥 ஒரு அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு 1.25 லட்ச ரூபாய் மாத ஊதியம் வழங்கப்படுகிறது.
ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 7000 அல்லது 8,000 மட்டுமே சம்பளம் பெறுகிறார்கள்.
தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைக்கு செல்கிறார்கள். - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்
💥 பொது மாறுதல் கலந்தாய்வு கோரும் ஆசிரியர்கள் நாளை மறுநாள் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கலந்தாய்வு வரும் 20-ம் தேதி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு.
💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,580 பேருக்கு கொரோனா உறுதி. 1,509 பேர் குணமடைந்த நிலையில் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
💥 நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திருவிக நகர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி அதிகபட்சமாக 7685 கேள்விகளை கேட்டு முதல் இடத்திலும் பாமக தலைவர் ஜி கே மணி 6478 கேள்விகளை கேட்டு இரண்டாவது இடத்திலும் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் 3583 கேள்விகளை கேட்டு மூன்றாவது இடத்திலும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சேலம் இரா அருள் 2914 கேள்விகளை கேட்டு நான்காவது இடத்திலும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் 1291 கேள்விகளை கேட்டு ஐந்தாவது இடத்திலும் உள்ளனர் என பேரவைத் தலைவர் அப்பாவு தகவல்.
முதன்மை எதிர்க்கட்சியான அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் அதிக கேள்விகள் கேட்ட முதல் 5 இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment