அக்னிப்புரட்சி இன்றைய (16.09.221) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (16.09.221) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (16.09.221) முக்கிய செய்திகள்.

💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

💥 மீண்டும் கோவையில் ஞாயிற்றுக் கிழமைகளில் கட்டுப்பாடு!

17ம் தேதி முதல் பால், காய்கறி, மளிகை மற்றும் மருந்து பொருட்கள் தவிர மற்ற கடைகளும்,சுற்றுலா தலங்கள், திரை அரங்குகள்,
பூங்காக்கள், வணிக வளாகங்கள் ஞாயிற்று கிழமை இயங்க மாவட்ட நிர்வாகம் தடை

💥 அதிமுக முன்னாள் அமைச்சர் K.C.வீரமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்  சோதனை

சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை உள்ளிட்ட 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன.

வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்துக்களை சேர்த்து இருக்கிறார் கே.சி.வீரமணி - லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் தகவல்.

2016 முதல் 2021 வரை 28.78 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் வாங்கியுள்ளார் கே.சி.வீரமணி.

ரூ.1.83 கோடிக்கு மிகாமல் கே.சி.வீரமணி சொத்து இருந்திருக்க வேண்டும் என எஃப்.ஐ.ஆரில் தகவல்.

💥 திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய 3 கோயில்களில் அன்னதான திட்டம்.

காணொலி மூலம் திட்டத்தை தொடங்கி
வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நாள் முழுவதும் மூன்று வேளையும்
அன்னதானம் வழங்க அரசு ஏற்பாடு.

💥 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

💥 நெடுஞ்சாலை துறையில் 4 புதிய கோட்டங்கள்.

ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், செய்யாறு ஆகிய 4 கோட்டங்களை புதியதாக உருவாக்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

4 புதிய கோட்டங்கள் உருவாக்கப்படுவதால் 83  புதிய பணியிடங்களை உருவாக்கவும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை உத்தரவு.

💥 ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 09.09.2021 அன்று வெளியான முதுகலை ஆசிரியர் நியமன அறிவிப்பிற்கு ஒரு வார கால தடை

💥 பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான எழுதுநர் வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

💥 சமூகநீதி முறையாக, முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என  முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

💥 குஜராத் சட்டப்பேரவைத் தலைவர் ராஜேந்திர திரிவேதி பதவியில் இருந்து விலகினார்

💥 தமிழகத்தில் 9-12 வகுப்பு வரை பயிலும் 35 இலட்சம் மாணவர்களில் 28 இலட்சம் பேர் பள்ளிகளுக்கு வருகை தருகின்றனர். அதில் இதுவரை 148 மாணவர்களுக்கு கொரோனா வெருவித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

💥 மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை - தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம்.

💥 வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களும் பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால் விடுப்பை பெற்றுக்கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு.

மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக அதிகரித்து ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

💥 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 11 ஆயிரம் மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு.

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு 5 முறை கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே சிறப்பு ஒதுக்கீடு.

9ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்திருந்தால் சிறப்பு ஒதுக்கீடு கிடையாது.

அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை.

அரசு பள்ளியில் படித்தது குறித்து விண்ணப்பத்தில் குறிப்பிடாத மாணவர்கள் மீண்டும் தெரிவிக்கலாம் - அமைச்சர் பொன்முடி

பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு செப்.27 ஆம் தேதி தொடங்குகிறது- அமைச்சர் பொன்முடி.

💥 டி20 போட்டிகளில், கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்.

துபாயில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு பின் விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு.

💥 அரசு பணியில் நேரடி நியமனம் வயது வரம்பு உயர்வு: தமிழக அரசு உத்தரவு.

தமிழக அரசு துறைகளில் நேரடி பணி நியமனத்தில் சேருவதற்கான வயது வரம்பை 30-ல் இருந்து 32 ஆக அதிகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருணை அடிப்படையில் சேரும் பணியிடங்களுக்கான வயது உச்ச வரம்பில் தற்போதைய நிலையில் மாற்றம் இல்லை.

மாற்றுத்திறனாளி பட்டியலினத்தவர்களுக்கான சட்டப்படியான வயது உச்ச வரம்பு நீட்டிப்பு, மற்றும் தளர்வு உள்ளிட்டவை தொடரும்-தமிழக அரசு.

💥 அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டில் கைப்பற்றப்பட்டவை விவரம்:

ரோல் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள்.
ரூ.34 லட்சம் ரொக்கம்
அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் ரூ 1.80 லட்சம்
5 கிலோ தங்கம்.
47 கிராம் வைர நகைகள்
7 கிலோ வெள்ளி
275 யூனிட் மணல் (ரூ 30 லட்சம் மதிப்பு)

💥 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,693 பேருக்கு கொரோனா உறுதி. 1,548 பேர் குணமடைந்த நிலையில் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

💥 செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாணவி அனுசுயா NEET தேர்வு தோல்வி அச்சம் காரணமாக தீ குளித்து  தற்கொலை முயற்சி

40% தீ காயங்களுடன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

💥 கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழில் இறப்பின் காரணம் மன நிறைவு அளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்து, மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவினரால் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு  கொரோனா இறப்புகளுக்கு அதிகாரபூர்வ ஆவணப்படிவம் பெற்றுக்கொள்ளலாம்

💥 தேசிய மாணவர் படையை மேம்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், வினய் சகஸ்ரபுத்தே, மகிந்த்ரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா, . மட்டைப்பந்து வீரர் MS தோனி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு.

இந்த குழுவுக்கு பாஜக  முன்னாள் மக்களவை உறுப்பினர் பைஜியந்த் பாண்டா தலைமை வகிக்க உள்ளார்.

💥 தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட "NEET தேர்வு விலக்கு" சட்ட முன்வரைவுக்கு குடியரசுத் தலைவர் அனுமதி அளிக்கவில்லையென்றால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை போல் திரளான தொடர் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை

* தோயல் ஊடகங்களை நடுவண் அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் நுட்பவியல் விதிக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் ஆணை

கொரோனா தொற்று பணிகளில் பணியாற்றிய மருத்துவர்கள் , செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்க தொகை உடனே வழங்கிட நிதி  ஒதுக்கப்பட்டுள்ளன

💥 தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை வந்தடைந்தார்

நாளை மறுநாள் ஆளுநர் மாளிகையில் 10.35 மணியளவில் பதவியேற்கிறார்.

அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது வரம்பை 32ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages