1987 அன்று நடந்த இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் தன் உயிர் ஈந்த 21 ஈகியர்களுக்கு, சமூகநீதி நாளில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP தனது இல்லத்தில் வீரவணக்கம் செலுத்தினார். - Agnipuratchi

1987 அன்று நடந்த இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் தன் உயிர் ஈந்த 21 ஈகியர்களுக்கு, சமூகநீதி நாளில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP தனது இல்லத்தில் வீரவணக்கம் செலுத்தினார்.

Share This

1987 அன்று நடந்த இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் தன் உயிர் ஈந்த 21 ஈகியர்களுக்கு, சமூகநீதி நாளில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP தனது இல்லத்தில் வீரவணக்கம் செலுத்தினார்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 1987- ஆம் ஆண்டு செப்டம்பர் பதினேழாம் நாள் தொடங்கிய ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளின் 34- ஆவது ஆண்டு நினைவு நாள் சமூகநீதி நாளாக இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளையொட்டி சென்னையில் உள்ள தமது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளின் உருவப் படங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கான இடங்களிலும் இட ஒதுக்கீடு போராட்டம் தியாகிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் துணை அமைப்புகளையும் சார்பு அணிகளையும் சேர்ந்தவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இணைப்பு: நிழற்படங்கள் மற்றும் காணொலி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages