செப்டம்பர் 17, தந்தை பெரியார் பிறந்தநாள் - சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு - மருத்துவர் இராமதாசு அய்யா தனது டுவிட்டர் பதிவில் வரவேற்பு - Agnipuratchi

செப்டம்பர் 17, தந்தை பெரியார் பிறந்தநாள் - சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு - மருத்துவர் இராமதாசு அய்யா தனது டுவிட்டர் பதிவில் வரவேற்பு

Share This

செப்டம்பர் 17, தந்தை பெரியார் பிறந்தநாள் - சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு  - மருத்துவர் இராமதாசு அய்யா தனது டுவிட்டர் பதிவில் வரவேற்பு

1. பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாக  கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.  சமூகநீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

2. 1987-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் நாள் தான் சமூக நீதி கேட்டு ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தை  தொடங்கினோம். அந்த நாளில் தான் சமூக நீதிக்காக போராடிய மாவீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

3. பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை செப்டம்பர் 17-ஆம் நாள் தான் சமூக நீதி நாள்.  33 ஆண்டுகளாக  செப்டம்பர் 17-ஆம் நாளை சமூகநீதி நாளாக கடைபிடித்து வருகிறோம். அந்த நாளில் சமூக நீதி மாநாடு நடத்தினோம். கடந்த ஆண்டு அதே நாளில் தான் ’சுக்கா... மிளகா... சமூகநீதி’ நூல் வெளியிடப்பட்டது!

4. தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க.  தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தேர்தல் அறிக்கைகளிலும் வாக்குறுதி அளித்து வந்தது. பா.ம.க. சமூகநீதி நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages