அக்னிப்புரட்சி இன்றைய (06.09.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
💥 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.
💥 மேட்டுப்பாளையம்- உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல்
மீண்டும் தொடங்கியது.
💥 நெல்லை மாவட்டம் முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ள காரையாறு, மாஞ்சோலை, குதிரைவெட்டி சுற்றுலா தளங்களுக்கு செல்ல அனுமதி.
மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவிக்கு செல்ல தொடர்ந்து தடை நீடிப்பு.
💥 முன்னாள் உத்திர பிரதேச ஆளுநர் ஆசித் குரோஷி மீது தேச துரோக வழக்கு
உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவதூறாக பேசியதாக வழக்குப் பதிவு.
💥 தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வழங்கும் இரண்டாண்டு முழுநேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 16 ஆம் தேதி கடைசி நாள்
2021-2023 மாணவர் சேர்க்கை விண்ணப்பம்: www.tnarch.gov.in
💥 கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.
💥 தந்தை பெரியார் பிறந்ததினமான செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி இனி ’சமூக நீதி நாள்’ என கொண்டாடப்படும்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 விதியின் கீழ் அறிவிப்பு.
💥 தமிழக கோயில்களில் 'தலைமுடி காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை” என்கிற நடைமுறை செயலுக்கு வந்தது
💥 கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்துக்கு தமிழகத்தை கொண்டுவர அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
:அமைச்சர் மா.சுப்பிரமணியன்
💥 நடுவண் அரசின் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ரமணா அதிருப்தி!
நாடு முழுவதும் உள்ள தீர்பாயங்களின் பணியிடங்களை நிரப்பப்படவில்லை. உச்சநீதிமன்ற நீதியரசர்களின் தீர்ப்புகளுக்கும் ஆணைகளுக்கும் நடுவண் அரசு மதிப்பளிப்பதில்லை..
நடுவண் அரசு தங்களது பொறுமையை சோதித்து பார்ப்பதாகவும், நடத்த விருப்பமில்லை என்றால் அனைத்து தீர்ப்பாயங்களையும் மூடிவிடுங்கள் எனவும் நடுவண் அரசுக்கு தலைமை நீதியரசர் ரமணா வேதனை.
💥 நீட் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
ஒரு சில மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவர்கள் பங்குபெறும் நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டம்.
💥 வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது:
வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
கேரள, கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு வரும் 10-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.
💥 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை கட்டாயம் - சட்டப்பேரவையில் தொழிலாளர் நலநிதிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் திட்டக்குடி அமைச்சர் சி.வி.கணேசன்.
கடைகளில் பணியாளர்கள்தொடர்ந்து நிற்க வைக்கப்படுவதால் பலவித உடல்நல கேடுகளுக்கு ஆளாகின்றனர் - அமைச்சர் சி.வி.கணேசன்.
தமிழகத்திலுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்
சட்டத்திருத்த முன்வடிவை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்
💥 இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படலாம். ஆனால், 97.5% உயிர் பாதுகாப்பு உறுதி - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
💥 செப்டம்பர் 8 ம் தேதி காலை 10 மணி, மாலை 5 மணி என இரு வேளைகளில் சட்டமன்றம் நடைபெறும்.
வரும் 10,11,12 ஆகிய 3 நாட்கள் விடுமுறை. 13ம் தேதி கேள்வி நேரம் கிடையாது- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
💥 NEET தேர்வை ஒத்திவைக்க கோரி தொடரப்பட்ட வேண்டுதல்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
💥 ஆப்கானிஸ்தானில் அமைய இருக்கும் புதிய அரசாங்க அறிவிப்பு விழாவில் பங்கேற்க துருக்கி, சீனா, ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு தலிபான் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது
* கோவில் நிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதை எதிர்த்த வழக்கு.
* வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலை சீரமைக்கவும், கோவில் பராமரிப்புக்கு தொகுப்பு நிதியை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை- தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி.
* உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளுக்கும் உத்தரவுகளுக்கும் மத்திய அரசு மதிப்பளிப்பதில்லை.
நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பாதது குறித்து தலைமை நீதிபதி அதிருப்தி.
தங்களது பொறுமையை மிகவும் சோதித்து பார்ப்பதாகவும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம்.
💥 கோயில்களின் முன் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம்.
இந்து முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த கோபிநாத் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி, ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு, பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குத் தடை என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
கரோனா பரவல் அதிகரிக்காத வகையில், பொது இடங்களில் கூடாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
கோயில்களின் முன்வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சேகரித்து நீர்நிலைகளில் கரைப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, விநாயகர் சதுர்த்தி விழாவில் மக்கள் எந்த சமரசமும் இன்றி கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
💥 கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளியை குறைத்து, 28 நாட்களுக்குப் பிறகு செலுத்தலாம் - கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
கொரோனா தடுப்பூசி 1, 2வது தடுப்பூசிக்கான 84 நாள் இடைவெளி என்ற மத்திய அரசின் நிலைப்பாடு நிராகரிப்பு.
💥 எச்சரிக்கை!
அட்டை விபரம்/செயலாக்க OTP, வெகுமதிப்புள்ளிக்காக அறியாதவர்கள் அழைத்தால் கவனமாக இருங்கள். RBL பேங்க் ஒருபோதும் இத்தகைய விபரங்களைக் கேட்காது.
💥 4வது டெஸ்ட் - பும்ரா சாதனை:
இங்கிலாந்துக்கு வீரர் 'ஒலி போப்' விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தனது 100 விக்கெட்டை பதிவு செய்தார் இந்திய வீரர்.
கபில் தேவ் சாதனை முறியடித்தார் பும்ரா. டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 100 விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் பும்ரா.
25 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய கபில்தேவ் சாதனையை 24வது போட்டியிலே 100 வது விக்கெட்டை வீழ்த்தி பும்ரா சாதனை.
💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 1,564 பேர் டிஸ்சார்ஜ்.
18 பேர் உயிரிழந்த நிலையில், 16,256 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
* சட்டப்பேரவையில் கைத்தறித்துறை அமைச்சரின் தடுமாற்றத்தால் இன்று நடைபெற வேண்டிய அலுவல் பணிகள் அனைத்தையும் நாளை ஒத்திவைத்தார் பேரவைத் தலைவர் அப்பாவு
💥 முக ஸ்டாலின் :- சமூக நீதிக்கான சரித்திர நாயகர்
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என்ற பட்டத்தை தாய் கழகமான திராவிடக் கழகம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம் : திராவிட கழக தலைவர் கி.வீரமணி
* தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் - செயலராக பேராசிரியர் மு.ராமசாமி நியமனம்
💥 பள்ளிகள் திறப்புக்கு பின்னர் தமிழகத்தில் இதுவரை 24 மாணவர்கள் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
💥 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்
மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி இடஇதுக்கீடு விவரம்.
பொதுப் பிரிவு - நெல்லை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர்
பொது ( பெண்கள்) - தென்காசி, ராணிபேட்டை
தனி(பட்டியலினம்) (பெண்கள் ) -செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி
* இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி | 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை
💥 நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.
செப்.12-ம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செப்.11-ம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் nbe.edu.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment