அக்னிப்புரட்சி இன்றைய (17.09.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
💥 பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இணைந்து கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றினர்.
💥 ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு:
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.34,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.4,365க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 காசு உயர்ந்து ரூ.65.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
💥 ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா துணை கேப்டனாக செயல்படக்கூடாது என பிசிசி ஐயிடம் கோலி வலியுறுத்தியதாக தகவல். டி20 உலகக் கோப்பையில் தோற்றால் தன்னை பொறுப்பில் இருந்து தூக்கிவிடுவார்கள் என்பதால் தானே விலகியதாக டைம்ஸ் ஆப் இந்தியா தகவல். ஒருநாள் போட்டிகளில் கோலி தொடர்ந்து கேப்டனாக செயல்படுவாரா என்பது டி20 உலகக் கோப்பை வெற்றியை பொறுத்தே அமையும் என தகவல்.
💥 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளதாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் அரியலூரில் பேட்டி
* Memes Creatorகளுக்கு போட்டி!: திருவள்ளூர் ஆட்சியரகம் அறிவிப்பு
தலைப்பு: முகக்கவசம் & தடுப்பூசியின் அவசியம் குறித்து
பதிவிட வேண்டிய கடைசி நாள்: 18.09.2021@TiruvallurCollr என tag செய்து Memes படைப்புகளை சமர்ப்பிக்க வேண்டும்.
சிறந்த Memesக்கு பரிசு வழங்கப்பட உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகம் அறிவிப்பு.
💥 இன்று தமிழகம் முழுவதும் சமூக நீதி நாள் அனுசரிப்பு:
சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை சமூக நீதி நாள் - முதலமைச்சர் உறுதிமொழி ஏற்பு.
இராணுவ மைதானத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் உறுதிமொழியேற்பு நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், தலைமைச்செயலாளர், அலுவலர்கள் பங்கேற்பு.
தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் இன்று சமூக நீதி நாளாகக் கொண்டாடப் படுகிறது.அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப் படவுள்ளது.
💥 இதேபோல் வன்னியர் சங்க சார்பில் 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளின் நினைவாக சமூக நீதி நாளகாவும் வன்னியர் சங்கம் & பாமக சார்பில் தமிழகம் முழுவதும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
💥 உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதல் காலம் கோரிய தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர் 20-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது
💥 சாணி பவுடர் விற்பனைக்கு தடை
விதிக்கப்படும்.
எலி மருந்து, பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
தனி நபர்களுக்கு எலி மருந்து, பால்டாயில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
💥 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுக்கும் விவகாரம்.
சென்னை உயர்நீதிமன்ற அனுமதிக்கு,
உச்சநீதிமன்றம் இடைக்கால தடை -உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு உத்தரவு.
வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
கோயில் நிலத்தை மதிப்பீடு செய்ய 2 மதிப்பீட்டாளர்களை சமீபத்தில் நியமித்தது உயர்நீதிமன்றம்.
💥 உள்ளாட்சி பதவி - ஏலம் விட்டால் நடவடிக்கை.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
💥 காவல் நிலைய பெயர் பலகைகளில் தனியார் நிறுவனங்களின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உத்தரவு.
தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து நன்கொடை வழங்கி சில காவல் நிலையங்களில் பெயர்ப்பலகை வைத்துள்ளன.
💥 நாளை காலை 10.30 மணிக்கு தமிழக ஆளுநராக பதவியேற்கிறார் R.N.ரவி!
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் பதவியேற்பு நிகழ்வை நடத்தி வைக்கிறார்.
💥 வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்பே மழைநீரை சேகரிக்க அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு IAS கடிதம்
* பனை மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்!
வேளாண் நிதிநிலை அறிக்கையின் போது உறுதியளித்தபடி ஒரு இலட்சம் பனை விதைகளை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முதலமைச்சரிடம் வழங்கினார்.
💥 மருத்துவ படிப்பில் அனைத்திந்திய இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு மேல்முறையீடு
💥 தெலங்கானா: பூபாலப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அஞ்சாநகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியிலிருந்த வனத்துறை அலுவலர் திவ்யா மற்றும் அவரது குழுவினருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றனர்
💥 TASMAC நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக தமிழக அரசு தகவல்
சென்னையை சேர்ந்த காசிமாயன் என்பவர் TASMAC விற்பனை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்த கேள்விக்கு
2010-11ல் ₹3.56 கோடி, 2011-12ல் ₹1.12 கோடி, 2012-13ல் ₹103.64 கோடி 2013-14ல் ₹64.44 கோடி, 2019-20ல் ₹64.44 கோடி TASMAC நிறுவனத்திற்கு நட்டம் ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு பதில்
💥 பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது நியூசிலாந்து:
பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை கைவிடுவதாக நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அறிவிப்பு.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக 18 ஆண்டுகளுக்கு பின்பு பாகிஸ்தான் சென்றிருந்தது நியூசிலாந்து அணி.
வீரர்களின் பாதுகாப்பே முக்கியம்; பாகிஸ்தானில் உள்ள வீரர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.
* சென்னை கிரீன்வேஸ் சாலையில் எதிர்க்கட்சித்தலைவருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்.
* அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராக வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை நிர்பந்திக்க கூடாது.
எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குகளை திரும்ப பெற்ற அரசாணை தாக்கல்.
17 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பு அக்டோபர் 8 - ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
💥 உள்ளாட்சித் தேர்தல்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.
💥 தந்தை பெரியாருக்கு கேரளாவில் மரியாதை!
பெரியார் பிறந்தநாளான இன்று கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கோமில் உள்ள அவரது உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து கோட்டயம் ஆட்சியர் மரியாதை செலுத்தினார். வைக்கோம் கோவில் நுழைவு போராட்ட நினைவாக பெரியாருக்கு அங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
💥 IIT, IIM, NIT உள்ளிட்ட நடுவண் உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் ஏழை BC, MBC, SC, ST மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு.
💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,669 பேருக்கு கொரோனா உறுதி. 1,565 பேர் குணமடைந்த நிலையில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
💥 ஜிஎஸ்டியில் பெட்ரோல் - இதுநேரமல்ல:
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு - மத்திய நிதியமைச்சர்.
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து - நிர்மலா சீதாராமன்.
💥 ரூ.16 கோடி வரை விற்கப்படும் உயிர் காக்கும் மருந்துகளான Zolgensma & Viltepso ஆகிய மருந்துகளுக்கு இனி ஜி.எஸ்.டி யில் வரியிலிருந்து முழுமையான விலக்கு அளிக்க முடிவு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
💥 ஜனவரி 1,2022 முதல் உணவு வணிக சேவை தளங்களான Swiggy, Zomato உள்ளிட்டவைகளுக்கு GST வரம்புக்குள் கொண்டு வர 45வது GST குழுக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
சரக்கு வாகனங்களுக்கு மாநில அரசுகள் விதிக்கும் National Permit கட்டணத்துக்கு முற்றிலுமாக GST வரி விலக்கு வழங்கப்படுகிறது- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
💥 உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.
💥 பெட்ரோலிய பொருட்களை GST வரம்புக்குள் கொண்டுவரக் கூடாது என்பதில் GST குழு உறுப்பினர்கள் (மாநிலங்கள்) உறுதியாக உள்ளனர்.
கேரள உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் இது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
💥 பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31,2022 வரை நீட்டிப்பு
- நடுவண் நேரடி வரிகள் வாரியம்
No comments:
Post a Comment