அக்னிப்புரட்சி இன்றைய (18.09.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
💥 பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்வு: அரசாணை பற்றி விளக்கம்.
அரசாணை வெளியாவதற்கு முன்பே 9 மாத பேறுகால விடுப்பில் சென்றவர்களும், 12 மாத பேறுகால விடுப்புக்கு தகுதி உடையவர்கள்- தலைமைச் செயலாளர் இறையன்பு.
9 மாத கால விடுப்பு முடிந்தும், பணிக்கு திரும்பாமல் விடுப்பில் உள்ளவர்களுக்கும், அது பணி நாளாகவே கருதப்படும்- தலைமைச் செயலாளர்.
💥 தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என்.ரவி.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவிக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
தமிழக ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சியில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 8 வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது
💥 10 ஆண்டு தமிழ்நாடு மாநில அரசுப் பத்திரங்கள் ஏலம்
💥 மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக உள்ளார் நடுவண் இணை அமைச்சர் L முருகன்.
💥 தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன்.
பாரம்பரியம், பண்பாடு மிக்க தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் மகிழ்ச்சி.
அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன் -தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி.
அரசின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளதால் என்னுடைய பொறுப்பை சிறப்பாக செய்வேன்.
என்னால் இயன்ற அளவு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசாக அளித்துள்ள புத்தகங்கள்
"Keeladi"- by R sivantham, M. Seran '
"Madras" -edited by Muthiah
💥 பாலிவுட் நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிப்பு.
நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான 28 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.
💥 தற்கொலை தீர்வல்ல -வீடியோ மூலம் நடிகர் சூர்யா உருக்கம்:
ஒரு பரீட்ச உங்களோட உயிரை விட பெருசில்ல; மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்ல; சாதிக்கிறதுக்கு அத்தனை விஷயங்கள் இருக்கு.
எந்த ஒரு கவலையானாலும் சில காலத்துக்கு பிறகு குறைந்துவிடும்.
மதிப்பெண்ணும் தேர்வும் மட்டுமே வாழ்க்கை இல்லை; தற்கொலை என்பது உங்களை விரும்புவோருக்கு நீங்கள் தரும் தண்டனை; தைரியமாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என நடிகர் சூர்யா அறிவுறுத்தல்.
💥 தலைமைச் செயலகத்தை மீண்டும் ஓமந்தூரார் தோட்டத்திற்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர் சங்கம் முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை
💥 காலை 10 மணிக்கு செக் அவுட் என்ற முறை சட்ட விதிமீறல்.
விடுதி எடுக்கும் நேரத்தில் இருந்து, 24 மணி நேரம் சுற்றுலா பயணிகள் அறையை பயன்படுத்த உரிமை உண்டு - கொடைக்கானல் தனியார் விடுதி உரிமையாளர்களுக்கு கோட்டாட்சியர் உத்தரவு.
💥 ஆசிரியர்களின் கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.
ஆசிரியர் சங்கங்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
💥 எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் நிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இருக்காது. தேர்தல் வாக்குறுதி உட்பட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்.
💥 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.
வே.அமுதவல்லி (காஞ்சிபுரம்), வா.சம்பத் (செங்கல்பட்டு), கே.எஸ் பழனிசாமி (விழுப்புரம்), கே.விவேகானந்தன் (கள்ளக்குறிச்சி), சா.விஜயராஜ் குமார் (வேலூர்), சோ.மதுமதி (ராணிப்பேட்டை), சி.காமராஜ் (திருப்பத்தூர்) ஆகியோர் நியமனம்.
💥 பஞ்சாப் முதல்வர் ராஜினாமா:
பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ராஜினாமா-ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார் அமரீந்தர் சிங்.
முதலமைச்சரை மாற்ற வேண்டுமென பஞ்சாப் காங். எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் அமரீந்தர் சிங் ராஜினாமா.
💥 முனைவர் கா செல்லப்பனின் "இரவீந்திரநாத் தாகூரின் கோரா" - தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான 2020- சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்வாகியுள்ளது.
கோரா, இரவிந்திரநாத் தாகூரின் உலகப் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்றாகும். நாடு, சாதி, மதம் , ஆண்-பெண் உறவுகள் மற்றும் முற்போக்கு – பிற்போக்குச் சிந்தனைகள் என வாழ்க்கையில் அடிப்படை அடையாளச் சின்னங்களை அலசி, ஆராய்ந்து, வெளிச்சம் போட்டு காட்டி நம்மைச் சிந்திக்கவைக்கும் ஒரு மகத்தான நாவல் கோரா. இந்நூல் முக்கஜியின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கமாகும்.
💥 தமிழின் உலகப் பொதுமறையான "திருக்குறள்" நூலை இந்தியில் மொழி பெயர்த்தமைக்காக எழுத்தாளர் TES இராகவனுக்கு 2020- சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்பு (இந்தி) விருது அறிவிக்கப்பட்டுள்ளது
💥 தேவைப்பட்டால் கோவையைப் போல் சென்னையிலும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் - மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி.
ஒரு மாதத்திற்குள் சென்னையில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட இலக்கு - ககன்தீப் சிங் பேடி.
No comments:
Post a Comment