அக்னிப்புரட்சி இன்றைய (23.09.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (23.09.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (23.09.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

* டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது; அவ்வாறு விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை.

வாடிக்கையாளர்கள் பார்க்கும்படி விலைப்பட்டியல் இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் வாங்கும் மதுவுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும்  - டாஸ்மாக் நிர்வாகம்.

* நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.55லிருந்து 20 காசுகள் குறைத்து ரூ.4.35ஆக விலை நிர்ணயம்.

நாமக்கல் - ரூ.4.35
சென்னை - ரூ.5.00
- தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு.

* திருவண்ணாமலை மாவட்டம் 'நல்லான்பிள்ளை பெற்றாள்' சிற்றூர் அருகில் உள்ள மலையருகே இரு காலகட்டத்தை சேர்ந்த கற்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

இவ்வோவியங்களை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தொல்லியல் துறை பாதுகாத்தும், ஆவணப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க ஆர்வலர்கள் கோரிக்கை.

* விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவில்லை, பொறுப்பேற்றுள்ளேன்.

மே மாதம் 7ம் தேதி முதல்வராக பொறுப்பு ஏற்றேன்; அன்று முதல் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர்கள் போட்டி போட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மொத்தமாக 2 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே மின் இணைப்புகளை கொடுத்துள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்று 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்குகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்:
தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 20 ஆயிரம் மையங்களில் 'மெகா தடுப்பூசி' முகாம் நடைபெறும் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

ஒரே நாளில் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் - மா.சுப்பிரமணியன்.

* 18 இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம்:

தேர்வுத்துறை இயக்குநராக சேதுராமவர்மா நியமனம்.

பாடநூல் & கல்வியியல் பணிகள் கழக செயலாளராக கண்ணப்பன் நியமனம்-பள்ளிக்கல்வித்துறை செயலாளர்

தொடக்கக் கல்வி இயக்குநராக அறிவொளி நியமனம்.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநராக கருப்பசாமி நீடிப்பார்- பள்ளிக்கல்வித்துறை செயலாளர்.

* தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக்கொலை.

தாம்பரம் ரயில் நிலைய வாசலில் சுவேதா என்ற கல்லூரி மாணவி குத்திக்கொலை.

மாணவியை கத்தியால் குத்திய இளைஞரும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி.

* தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் - சி.பி.எஸ்.இ அறிவிப்பு.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட  4 நகரங்களில்  தேர்வு நடத்தப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக தற்போது 19 மாவட்டங்களாக அதிகரிப்பு.

சென்னை,கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய  நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்.

* TNPSC தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அறிவுரைகள் வெளியீடு

முன்னதாக 40%  பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்று அரசு அறிவித்திருந்த நிலையில், 30%  என்று குறிப்பிடப்பட்டுள்ளது

instructions-to-candiates.pdf

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages