அக்னிப்புரட்சி இன்றைய (24.09.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.93.46 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
* ஆதார் இணைப்பு - தமிழக அரசு உத்தரவு:
அரசு நல திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவு.
டிசம்பர் 31-ம் தேதிக்குள் அரசுத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், இணையதளங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் - தமிழக அரசு.
* தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் 702 குளிர்சாதன அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
சென்னை மாநகரில் 48 குளிர்சாதன பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக 340 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும்.
* ஜப்பானிடமிருந்து C-295 வகை விமானங்கள் 56, இந்திய வான் படைக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
* அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு:
20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
இன்று முதல் coe1.annauniv.edu இணையதளத்தில் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையம் தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.
2002-2003 முதல் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு -அண்ணா பல்கலைக்கழகம்.
* தனி நபர்கள் யானைகள் வைத்திருக்க கூடாது.
தமிழகத்தில் இனி யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது.
கோயில் யானைகள் பராமரிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* ஆணவக் கொலை - ஒருவருக்கு தூக்கு:
கடலூர், புதுக்கூரைப் பேட்டையில் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் அண்ணன் மருதுபாண்டி என்பவருக்கு தூக்கு தண்டனை.
பெண்ணின் தந்தை உள்ளிட்ட 10 பேருக்கு மூன்று ஆயுள் தண்டனையும் வழக்குப்பதிவு செய்யாமல் சாட்சிகளை அழித்ததாக காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
2003 ஆம் ஆண்டு முருகேசன் - கண்ணகி இருவரும் சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் வாய் மற்றும் காதில் விஷத்தை ஊற்றி தீவைத்துக் கொளுத்தி கொலை செய்யப்பட்டனர்.
* முக்கியமானது:
சரிபார்ப்புக்காக எந்த ஒரு எண்ணையும் அழைக்க/KYC அப்டேட் செய்ய/ஆதார் விவரங்களை புதுப்பிக்க சொல்லும் எந்த பயன்பாட்டையும் பதிவிறக்குமாறு கேட்கும் மோசடி செய்திகளை நம்பவேண்டாம். இதுபோன்ற செயல்களுக்கு எந்த மூன்றாம் தரப்பு பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்ய ஜியோ ஒருபோதும் கேட்பதில்லை. இதுபோன்ற SMS/அழைப்புகளிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள், இதனால் நிதி இழப்பு ஏற்படக்கூடும். பாதுகாப்பாக இருங்கள்.
- அணி ஜியோ
* டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - ரவுடி கும்பலிடையே மோதல் - 4 பேர் சுட்டுக்கொலை!
* 20 ஆண்டுகளாக பாட நிலுவை வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் (Semester) தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத, இன்று முதல் https://coe1.annauniv.edu/ இணையதளத்தில் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக ₹5,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்
- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
* முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து- மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு.
* தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவு.
ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ் குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோருக்கு டிஜிபி அந்தஸ்து.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,733 பேருக்கு கொரோனா உறுதி.
1,631 பேர் குணமடைந்த நிலையில் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
No comments:
Post a Comment