அக்னிப்புரட்சி இன்றைய (25.09.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.46 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
* அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு
வெள்ளை மாளிகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை
* உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு(NDA) பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
திருமணமாக பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
* TASMAC ஊழியர்களுக்கு ₹500 ஊதிய உயர்வு: ஏப்ரல் 1, 2021 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
* 2019 பிறகு / இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தில் அங்கீகரிகப்பட்ட மாநில கட்சிகளின் பெயர்/சின்னம்/முகவரி வெளியிடு
1. திராவிட முன்னேற்ற கழகம் - உதய சூரியன்
2. அ.இ.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - இரட்டை இலை.
3. தேசிய முற்போக்கு திராவிட கழகம் - முரசு
* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்:
மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவடைந்து கலிங்கப்பட்டினத்திற்கு சுமார் 740 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
இது வலுவடைந்து, வடக்கு ஆந்திரா, ஒடிசா மாநிலம் இடையே 26ம் தேதி காலை கரையை கடக்கும்.
இதன் காரணமாக கடலூர், சென்னை, நாகை, தூத்துக்குடி, புதுவை உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் தூர எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றம்.
* பாடகர் எஸ்.பி.பியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று:
1969ல் சுசிலாவுடன் இணைந்து, 'இயற்கை என்னும் இளைய கன்னி...' எனும் முதல் பாடலை பாடினார்.
இப்படம் வெளிவரும் முன், 1969 மே 1ல் எம்.ஜி.ஆரின், அடிமைப்பெண் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசிலாவுடன் இவர் பாடிய 'ஆயிரம் நிலவே வா...' பாடல், 'ஹிட்' ஆனது.
இது தமிழில் இவரது முதல் பாடலாக அமைந்தது.
நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், 'டப்பிங் ஆர்டிஸ்ட்' என அனைத்திலும் முத்திரை பதித்த சாதனையாளர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தவர்.
* ஆன்லைன் விளையாட்டுக்கள் பேரழிவைத் தரும்” -பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை:
ஆன்லைன் விளையாட்டுக்களிலிருந்து பள்ளி மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.
மாணவர்களின் தேர்ச்சி நிலை மற்றும் பழக்கவழக்கங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
ஆன்லைன் கல்வியும், ஆன்லைன் விளையாட்டுகளும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும்.
மாணவர்கள் எந்த ஆப்-களை உபயோகிக்கிறார்கள், எந்த ஆப்-ல் அதிக நேரம் செலவிடுகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும்.
தனி நபர் தகவல் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது. ஆப்-களை விலைக்கு வாங்க அனுமதிக்கக் கூடாது.
பெற்றோர்களின் டெபிட்/கிரெடிட் கார்டுகள், OTP-ஐ பிள்ளைகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
ஆண்டிவைரஸ், ஸ்பைவேர் மென்பொருள்களை Install செய்துகொள்ள வேண்டும்.
இணையதளத்திலோ, அப்ளிகேஷனிலோ ஏதேனும் விபரீதமாக நிகழ்ந்துவிட்டால் உடனடியாக ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதை ரிப்போர்ட் செய்ய வேண்டும்.
மாணவர்கள் Adult App/Website பயன்படுத்துகிறார்களா? என்பதைக் கண்காணித்து அதை தடுத்து உரிய கவுன்சிலிங் வழங்க வேண்டும்.
மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதை தடுத்து, படிப்பில் கவனம் செலுத்த ஏதுவாக பெற்றோர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
மாணவர்களின் நடத்தையில் ஏதும் வித்தியாசம் தென்பட்டால் உடனடியாக செல்போன், மடிக்கணினி, கணினிகளை சோதித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெற்றோர்கள், ஆசிரியர்களிடத்தில் ஆன்லைன் விளையாட்டுகளின் விபரீதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.
மத்திய பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவைப் பின்பற்றி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.
* வங்கக் கடலில் குலாப் புயல் உருவாகிறது- சென்னை வானிலை மையம்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையை கடக்கும்.
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறும்.
குலாப் புயல் நாளை மாலை கரையை கடக்கும்.
வடமேற்கு திசையை நோக்கி நகரும் இந்த குலாப் புயல் ஒடிஸா- ஆந்திரா இடையே கரையை கடக்கும்.
குலாப் என்ற பெயர் பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்டதாகும். குலாப் என்றால் இந்தியில் ரோஜா மலர் என பொருள்.
* சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி மண் எடுக்க அரசு அனுமதி:
சுற்றுச்சூழல் அனுமதியின்றி,மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று 1.5 மீட்டர் வரை மண் எடுக்கலாம்.
மண்பாண்ட தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என்ற அறிவிப்பை அரசாணையாக வெளியிட்டது தமிழக அரசு.
* சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி நடுவண் அரசுக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 33 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் கடிதம்
* மூன்றாம் பாலினத்தவரை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க நடுவண் அரசு முடிவு
* இந்தியாவில் முதல் முறையாக மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் அமெரிக்க தொழில் நுட்பத்தில் கொரோனா நோயாளிகளை கண்டறிய அதி நவீன வயர்லெஸ் பயோ சென்சார் கருவி செயல்பாட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனை மற்றும் லைப் சயின்ஸ் இணைத்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
* டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வானது ஏப்ரல் 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.12,750ல் இருந்து ரூ.13,250ஆக உயர்த்தப்படுகிறது.
* நீதிமன்ற அலுவல் அஞ்சல்களில் முதன்மை அமைச்சர் நரேந்திர மோடியின் படம் இடம் பெறுவது குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் மின்னஞ்சலின் அடிக்குறிப்பில் நரேந்திர மோடியின் படம் நீக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தின் படத்தை இடம்பெறச் செய்துள்ளது தேசிய தகவலியல் நடுவம்
* சென்னை மாநகராட்சியில் இன்று முதல் 03.10.2021 வரை மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு DGP Dr. சைலேந்திர பாபு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். கலந்து கொள்ள விருப்பமுள்ளோர் கீழே இடுகையில் பதிவு செய்து கொள்ளலாம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdFjvmQX6my_l9sV2ZBeWM566bVMVaWGP0-iPxULWVmIQtKig/viewform
* கடந்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 2,513 ரவுடிகள் கைது.
கூலிப்படையினர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் இல்லை - டிஜிபி சைலேந்திரபாபு.
* அமெரிக்கா: நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபையின் 76-வது அமர்வில் பிரதமர் மோடி உரை.
தந்தைக்கு டீக்கடையில் உதவி செய்து கொண்டிருந்த நான், தற்போது ஐ.நா.வில் உரையாற்றுகிறேன்.
துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம்.
பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக எடுப்பவர்கள், அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும்.
உலகில் உள்ள அனைத்து தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களும், இந்தியாவில் வந்து தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இந்தியா சீர்திருத்தங்களை அமல்படுத்தும் போது உலகம் முழுவதும் அதன் தாக்கம் ஏற்படுகிறது.
ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவை செய்து ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி , சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்படுகிறது.
சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது: பிரதமர்.
உலகிலேயே 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிக்கக்கூடிய டி.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம்.
மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி மீதான பரிசோதனையும், இந்தியாவில் நடைபெற்று வருகிறது.- பிரதமர்
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,724 பேருக்கு கொரோனா பாதிப்பு; 1,635 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு.
1.56 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; தற்போது 17,263 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
No comments:
Post a Comment