அக்னிப்புரட்சி இன்றைய (30.09.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ 99.36 ஆகவும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ 94.45 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை பதிவாளர் மற்றும் பதிவுத்துறை தலைவர் ஏற்பளிப்பு நீக்கம் செய்வதற்கு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு உள்ளது
* கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழக முதுநிலை கலை ( ஆட்சிமையியல் & அரசியல் ) படிப்பில் பெரியார், ஜின்னா, அபுல் கலாம் ஆசாத் ஆகியோரைப் பற்றிய கருத்துருக்கள் சேர்ப்பு
தீன்தயாள் உபாத்யாயா, சங்பரிவார் தொடர்பாக இடம்பெற்றிருந்த கருத்துருக்கள் நீக்கம் பல்கலைக்கழக கல்வியியல் குழு நடவடிக்கை
* தருமபுரியில் பேறுகால அவசர சிகிச்சை, சிசு பராமரிப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார்.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடியிலான 11 கட்டிடங்கள், ஆய்வகங்கள் கட்டப்பட்டுள்ளது.
புதிய கட்டிடத்தில் தரைத் தளத்தில் 33 படுக்கைகள், முதல் தளத்தில் 22 படுக்கைகள், இரண்டாம் தளத்தில் 95 படுக்கைகள், 4ம் தளத்தில் 50 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 200 படுக்கைகள் மூலம் கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
மேலும், 100% கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 7 ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
7 கிராம ஊராட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இதனையடுத்து, கால்நடை மருத்துவமனை, வேளாண் விரிவாக்க மையம், கல்லூரி விடுதி கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
* தர்மபுரியில் இருந்து ஒகேனக்கல் புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.
பாதி வழியில் காரை நிறுத்தி, திடீரென பள்ளி மாணவிகளை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்.
பள்ளி செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார் முதல்வர்.
* ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் மதுவிற்க தடை.
அக்.4 -9 ஆம் தேதி வரையிலும், அக்.7-9 வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான அக்.12ம் தேதி மதுக்கடை செயல்பட அனுமதி இல்லை - மாநில தேர்தல் ஆணையம்.
* அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு;
உள்ளாட்சி தேர்தலில் எந்த புகாரும் இல்லாத வகையில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதிகாரிகளுடன் கலந்து பேசி நாளை விளக்கமளிக்க தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு:
வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.
* புதுச்சேரி தேர்தல் - நீதிமன்றம் எச்சரிக்கை:
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால் தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும்.
புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.
* தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓசூர் போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோயில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை, திருவண்ணாமலை, திருவான்மியூர், அரியலூர், பெண்ணாடம், சிவகங்கை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
* கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* பள்ளிகளுக்கு SOP வெளியிட்டது போல் கல்லூரிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் - உயர் கல்வித்துறை அரசாணை வெளியீடு
* கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்.4 ந் தேதி நேரடி வகுப்புகள் துவங்கும் -கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு.
அனைத்து கலை , அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்ததை அடுத்து உத்தரவு.
உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் அக் 4 - ந் தேதி முதல் நேரடி வகுப்புகளை துவங்க வேண்டும்.
மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்-கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,612 பேருக்கு கொரோனா உறுதி.
1,626 பேர் குணமடைந்த நிலையில் 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
* Brave lady.. Lucky she is. See how leopard was waiting for the right time, when target seems relatively small. CCTV from Mumbai.
மும்பை: தைரியமான மூதாட்டி. வீட்டிற்குள் புகுந்து தாக்க முயன்ற புலியை விரட்டிய மூதாட்டி.
No comments:
Post a Comment