அக்டோபர் - 1 உலக முதியோர் தினம் - பாமக தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து - Agnipuratchi

அக்டோபர் - 1 உலக முதியோர் தினம் - பாமக தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து

Share This

அக்டோபர் - 1 உலக முதியோர் தினம் - பாமக தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து
         
1.10.2021 இன்று  உலக முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர் அனைவரும் மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன், உடல் ஆரோக்யமுடன், நலமுடன் வாழ இனிய வாழ்த்துக்கள்.
           
இன்றைய முதியோர்கள் நேற்று வீட்டையும் நாட்டையும் காத்தவர்கள் . இவர்கள் இளம் வயது முதல் கடுமையாக உழைத்து குடும்பம் நடத்தி குழந்தைகளை பெற்று வளர்த்து ஆளாக்கி பல்வேறு சாதனைகள் படைத்தவர்கள், வயதான நிலையில் சில பெற்றோர்களை பாதுகாக்காமல் கண்டுகொள்ளாமல் கவனிப்பின்றி அலைய விடுவது மன்னிக்க முடியாத கொடுஞ்செயல் . பெற்றோர்கள்தான் கண்கண்ட தெய்வம். குடியிருந்த கோயில் .
            
வயதான பெற்றோர்களை மனம் நோகாமல், மகிழ்ச்சியுடன், பாதுகாப்பாக தங்களுடன் குடும்பத்தில் வைத்து உபசரிப்பது உயிர் மூச்சாக, உயிர்க் கடமையாக நினைத்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். கவனிப்பார் இல்லாத முதியோர்களுக்கு தொண்டு நிறுவனங்களும் அரசும் உதவ வேண்டும்.
     
முதியோர் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages