விடுதலை வேட்கை, சமூகப்புரட்சி உணர்வை ஊட்டிய பாரதியாரைப் போற்றுவோம்! பரப்புவோம்!!- மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.
ஒரு பெயரை கேட்கும் போதே தேசப்பற்று, மொழிப்பற்றுடன் நமது நரம்புகள் முறுக்கேறும் என்றால் அந்தப் பெயர் பாரதியார் தான். விடுதலை உணர்வையும், சமூகப் புரட்சி சிந்தனையையும் நமக்கு ஊட்டிய மகாகவியை அவரது நூறாவது நினைவு நாளில் வணங்குவோம்... போற்றுவோம்!
திருவள்ளுவருக்குப் பிறகு வாழ்க்கையின் அனைத்து அம்சங்கள் குறித்தும் பாடம் நடத்தியவர் பாரதி தான். பாப்பாகள் முதல் பாட்டி, பாட்டன்கள் வரை அனைவருக்கும் பாட்டு வழங்கியவர் பாரதி. அவரது பாடல்களையும், பெருமைகளையும் உலகெங்கும் பரப்புவோம்!
பாரதியார் வடித்த கவிதைகள் அனைத்தும் ரத்தினங்கள் தான். அவற்றில் என்னைக் கவர்ந்த சில வரிகளை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்! .. (சுதந்திரப் பயிர்)
பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ ? (சுதந்திர தாகம்)
விண்ணில் இரவிதனை விட்டுவிட்டு எவரும்போய்
மின்மினி கொள்வாரோ ? ….
மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ ?
================================
காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம் !!!
========================================
No comments:
Post a Comment