தற்போது விழாக்கள் காலம் என்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம். - மத்திய சுகாதார அமைச்சக சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன். - Agnipuratchi

தற்போது விழாக்கள் காலம் என்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம். - மத்திய சுகாதார அமைச்சக சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்.

Share This

தற்போது விழாக்கள் காலம் என்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம். - மத்திய சுகாதார அமைச்சக சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்.

வீட்டில் இருந்தே குடும்பத்தினருடன் திருவிழாவைக் கொண்டாட வேண்டும்.
நாடு முழுவதும் 65 மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

இவற்றில், 35 மாவட்டங்களில் மாற்றம் விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

30 மாவட்டங்களில் வாராந்திர மாற்றம் விகிதம் ஐந்து முதல் 10 சதவீதம் வரை உள்ளது.

இதுதவிர, 38 மாவட்டங்களில் தினமும் 100க்கும் மேற்பட்டோர் புதியதாக பாதிக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, வாராந்திர தொற்று விகிதம் ஐந்துக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே மாவட்டத்தின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கருத முடியும்.

இந்த விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இமாச்சல பிரதேசம், கேரளா, வடகிழக்கு மாநில மாவட்டங்களில் உள்ளன.

கேரளாவில் தற்போது 2.40 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் 51,419 நோயாளிகளும், கர்நாடகாவில் 17,085 பேரும், தமிழகத்தில் 16,180 பேரும், ஆந்திராவில் 14,510 பேரும் உள்ளனர்.

தேசிய அளவில் கிட்டதிட்ட 30 மாநிலங்களில் தலா 10,000க்கும் குறைவான மக்களே சிகிச்சையில் உள்ளனர்- ராஜேஷ் பூஷன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages