அக்னிப்புரட்சி இன்றைய ((01.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய ((01.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய ((01.10.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ 99.58 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து ரூ 94.74 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* தொடர் மழை காரணமாக கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர்  பிரபு சங்கர் உத்தரவு.

* நடிகர் சிவாஜி பிறந்த தினம்: முதலமைச்சர் மரியாதை.

சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை.

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 448 ரூபாய் உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 56 ரூபாய் உயர்ந்து நாலாயிரத்து 392 ரூபாய்க்கும்.

ஒரு சவரன் தங்கம் 448 ரூபாய் உயர்ந்து 35 ஆயிரத்து 136 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ 700 உயர்ந்து 63 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது .

* 2021-22 நிதியாண்டின் 3ஆம் காலாண்டுக்கான PPF,SSA உள்ளிட்ட நடுவண் அரசின் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதுமில்லை

💥 தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் ரூ.27 லட்சம் பறிமுதல்!

நேற்று சென்னை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 29 மாவட்டங்களில் உள்ள 38 அரசு அலுவலகங்களில்  நடைபெற்ற லஞ்ச தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரின் சோதனையில் கணக்கில் வராத பணம் ₹26.99 லட்சம் மற்றும் ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ₹2.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை  திருவான்மியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் தொகை ஏதும் கைப்பற்றப்பட வில்லை.

தர்மபுரி மாவட்டம் அரூர் நகர ஊராட்சி அலுவலகத்தில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  லஞ்ச ஒழிப்புத்துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட 8 அலுவலகங்களில் மட்டும் நேற்று தொடங்கிய சோதனை இன்னும் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது.

10-ம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அக். 4-ம் தேதி முதல் அவரவர் படித்த பள்ளிகள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்- தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

* பாலிடெக்னிக் முறைகேடு - 66 பேருக்கு தடை.

பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மேலும் 66 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி நடவடிக்கை.

* கரூர் அருகே தனியார் நிலத்தில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள் கவின், நவீன், வசந்த் ஆகிய 3 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு.

தண்ணீரில் இறங்கிய ஆடுகளை மீட்க குளத்தில் இறங்கியபோது விபரீதம்.

* கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கண்காணிப்பு அதிகாரிகளை வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் தடுப்பு பணி, கண்காணிப்பு அதிகாரிகளாக அனைத்து மாவட்டங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை பொறுத்த வரையில் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளே பருவமழைக்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக பணியாற்றுவார்கள் என அறிவிப்பு.

* சென்னையில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட ஆவடி மற்றும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகங்களுக்கு காவல் ஆணையர்களை நியமித்து - தமிழ்நாடு அரசு உத்தரவு.

தாம்பரம் ஆணையகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி ரவி ; ஆவடி மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ் . நியமனம்.

சென்னைக்கு
1.திருவல்லிக்கேணி, 2.கீழ்பாக்கம், 3. மயிலாப்பூர், 4. புளியந்தோப்பு, 5.பூக்கடை ஆகிய காவல் மாவட்டங்களும் ,

தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ்
1. தாம்பரம், 2. மவுண்ட், 3. அடையாறு, 4. பூந்தமல்லி, 5.தி.நகர் ஆகிய காவல் மாவட்டங்களும்,

ஆவடி ஆணையரகத்தின் கீழ்
1.அண்ணாநகர், 2.அம்பத்தூர், 3. மாதவரம், 4.வண்ணாரப்பேட்டை ஆகிய காவல் மாவட்டங்களும் அடங்கும்.

* நீலகிரி மாவட்டம் மசினகுடியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஆதிவாசி மாதன் (52) என்பவர் புலி தாக்கியதில் உயிரிழப்பு.

ஏற்கனவே கூடலூரில் 3 பேர் புலி தாக்கி உயிரிழந்த நிலையில் 4வதாக ஒருவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

* ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு:

நீலகிரி மாவட்டம் கூடலூரில் 4 பேரைக்கொன்ற டி 23 என்ற புலியை சுட்டுக் கொல்ல, வனத்துறை உத்தரவு.

மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க முடியவில்லை; கூண்டிலும் அகப்படவில்லை. இன்று மேலும் ஒருவரை புலி கொன்ற நிலையில், அதை சுட்டுக் கொல்ல உத்தரவு.

* பெற்ற தாயை கொலை செய்த மகனுக்கு தூக்கு:

2018ம் ஆண்டு தனது தாயார் திலகராணியின் கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் மகன் ஆனந்த் என்பவருக்கு மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

* வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமாகவும் தேர்தல் நடைபெற வழிகாட்டுதல்களை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்.

தேர்தல் நடத்தும் அலுவலரின் ஒப்புதலின்றி வேறு எவரும் வாக்குச்சாவடிக்குள் நுழையக் கூடாது.

வாக்குச்சாவடிக்கு சென்று வர வாக்காளர்களுக்கு இலவச பயணம் ஏற்பாடு செய்வது தமிழ்நாடு ஊராட்சி சட்டம் பிரிவு 68ன் படி தேர்தல் குற்றம்.

எம்.எல்.ஏ, எம்.பி ஆகியோர் வாக்களிப்பதை தவிர வேறெந்த காரணத்திற்காகவும் வாக்குச்சாவடிக்குள் நுழையக்கூடாது -மாநில தேர்தல்  ஆணையம்.

* தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது.

32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள்.

பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.
அதானியின் ஒரு நாள் வருமானம் 1,000 கோடியாக உயர்ந்துள்ளது.

இது யாருடைய இந்தியா?-மநீம தலைவர் கமல்ஹாசன்

* இந்தியாவிற்குள் வரும் பிரிட்டன் நாட்டவர்களுக்கு negative RTPCR சோதனை சான்றிதழ் கட்டாயம் என நடுவண் அரசு அறிவிப்பு.

மேலும் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கூட 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் எனவும் அரசு அறிவிப்பு.

அண்மையில் இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை பிரிட்டன் அரசு ஏற்க மறுத்ததாக செய்திகள் வெளியான நிலையில் நடுவண் அரசு முடிவு

அக்னிப்புரட்சி செய்திகள்:
நியாயவிலை கடைகள் மூலம் பனை வெல்லம் -  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

* நியாயவிலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார்.

அந்த வகையில், குறிப்பிட்ட நியாயவிலை கடைகள் மற்றும் அமுதம் அங்காடிகளில் பனை வெல்லம் விநியோகம் செய்ய அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களை பனைவெல்லம் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது; 100 கிராம் முதல் ஒரு கிலோ வரை விற்பனை செய்ய அனுமதி.

* Attention: Report complaints related to cyber crime at National Cyber Crime Reporting Portal
(https://cybercrime.gov.in) of MHA.

* கிராம சபை கூட்டங்களில் சுகாதாரத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டு மழைக்கால நோய்கள், கொரோனா தடுப்பு வழிமுறைகள், மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அறிவுறுத்தல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages