இந்திய ஹாக்கி அணி வீரர்கள் ரூபீந்தர் பால் சிங் மற்றும் பிரேந்திர லக்ரா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு - Agnipuratchi

இந்திய ஹாக்கி அணி வீரர்கள் ரூபீந்தர் பால் சிங் மற்றும் பிரேந்திர லக்ரா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

Share This

இந்திய ஹாக்கி அணி வீரர்கள் ரூபீந்தர் பால் சிங் மற்றும் பிரேந்திர லக்ரா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு  வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்த ஹாக்கி அணியின் மூத்த வீரர்கள் ரூபிந்தர் பால் சிங் மற்றும் பிரேந்தர லக்ரா ஆகிய இருவரும் பன்னாட்டு ஹாக்கி போட்டிகளிலிருந்து  ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை (30.09.2021) அறிவித்தனர்.

Drag Flicker ரூபீந்தர் பால் சிங்

2010 இல் பன்னாட்டு போட்டிகளில் விளையாடத் தொடங்கிய    ரூபிந்தர், நடந்து முடிந்த  டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா  பதக்கம் வெல்ல முதன்மை பங்கு வகித்தவர். பஞ்சாப்பை பிறப்பிடமாக கொண்ட  ரூபிந்தர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் மட்டும் நான்கு கோல்களை அடித்து அணியில் இரண்டாவது அதிக கோல் அடித்த வீரர் என்ற பெயரை பெற்றார்.

பாப் என்று சக வீரர்களால் அன்புடன் அழைக்கப்படும் ரூபிந்தர், 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம், 2016 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் வெற்றி, 2015  FIH ஹாக்கி உலக லீக் போட்டியில் வெண்கலம்  மற்றும் 2017 FIH ஹாக்கி உலக லீக் போட்டியிலும்  வெண்கலம் என கடந்த பத்தாண்டுகளில்  இந்தியாவின் வெற்றிகளுக்கு பெரும் பங்காற்றியவர்.

2013 ஆம் ஆண்டு சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை மற்றும் 2016 ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் அதிக கோல்களை அடித்தது அவரது மிகப் பெரிய சாதனையாக அமைந்தது. 2018-19 இல் ஒரு சிறிய  இடைவேளைக்கு பிறகு,  2020 ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் தனது ஹாட்ரிக் கோல் சாதனையை படைத்தார். இதற்கு முன்பு  2018 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் ஹாட்ரிக் கோல் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மேலான திறமையால்  பத்தாண்டுகளில் இந்தியா மட்டுமின்றி உலக ஹாக்கி ரசிகர்கள் மத்தியிலும் தனி இடத்தை பிடித்துள்ளார் ரூபிந்தர்.

Ace Defender பிரேந்திர லக்ரா

ஒடிசாவில் பிறந்து  ரூர்கேலா SAIL ஹாக்கி அகாதமியில் பயிற்சி பெற்ற பிரேந்திர லக்ரா சிட்னியில் நடந்த 2009 இளையோர் ஒலிம்பிக் திருவிழா, 2009 இளநிலை உலகக் கோப்பை, 2010 டாக்காவில் நடந்த SAAF போட்டி மற்றும் 2011 தென்னாப்பிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ்  போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார்.

இளையோர் அணியில் தனது விளையாட்டு பயணத்தை தொடங்கிய  லக்ரா 2010 தெற்காசிய கோப்பை போட்டியில் தேசிய அணிக்காக அறிமுகமானார். தென்கொரியாவில் நடைபெற்ற 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி, ராய்பூரில் நடைபெற்ற 2015 உலக லீக் இறுதிப் போட்டியில் வெண்கலம், 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் மற்றும் புவனேஸ்வரில் நடைபெற்ற 2019- FIH ஆண்கள் தொடர் இறுதிப் போட்டியில் வெற்றி என லக்ராவின் சாதனை  பட்டியல் நீள்கிறது.

2014 மற்றும் 2018 ஆடவர் FIH உலக ஹாக்கி கோப்பை போட்டி உள்ளிட்ட பல பன்னாட்டு  ஆட்டத் தொடர்களில் தனது பெரும் பங்கை செலுத்தியுள்ளார்.

இருப்பினும், முழங்கால் காயம் காரணமாக ரியோ ஒலிம்பிக் 2016 இல் லக்ராவால் பங்கேற்க  முடியவில்லை. எனினும் அதே ஆண்டில் நடைபெற்ற 2016 ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இவர் கலந்து கொண்டு  இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்ல உறுதுணையாக விளையாடினார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டித்தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக லக்ரா செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்
வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் இரு வீரர்களும் சிறப்பாக மிளிர வாழ்த்துவதாக ஹாக்கி இந்தியாவின் தலைவர் ஞானேந்திரோ நிங்கோம்பம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

~ கதிர் கோ

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages