அக்னிப்புரட்சி இன்றைய (02.10.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ 99.80 ஆகவும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ 95.02 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி பிறந்த தினம்.
டெல்லி ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
* பெருந்தலைவர் காமராஜரின் 47-வது ஆண்டு நினைவு தினம் இன்று:
காந்திய நெறியில் வாழ்ந்த காமராஜர், காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளான இன்றைய தினத்தில் மறைந்தார்.
காந்தியத்தின் கடைசித் துாண் சாய்ந்து இன்றோடு 47 ஆண்டுகள் கடந்து விட்டது.
மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் காந்தி உருவப்படத்திற்கு மரியாதை.
* முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனும், முன்னாள் எம்.எல்.ஏவும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இன்று அவரது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
* மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
பாப்பாப்பட்டி கிராமத்தை முதலமைச்சர் நேரடியாக தத்தெடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை.
* முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி வனப்பகுதியில் 4 பேரை கொன்ற புலி இருக்குமிடம் தெரியவந்து.
புலி இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து சுட்டுக் கொல்ல வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் தயாராகி வருகின்றனர்.
* 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை
திட்டமிட்டபடி நவெம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி
* இன்று (02.10.21) முதல் (08.10.21)வரை தேசிய காட்டுயிர் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. காட்டுயிர்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் இந்த வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழ் நாடு வனத்துறை சார்பில் இன்று தொடங்கி 8ஆம் தேதி வரையிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இன்றைய தினம் கூடலூரில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளைக் கொன்ற புலி ஒன்றை சுட்டுப் புடிக்க ஆணையிடப்பட்டுள்ளது வருத்தத்திற்குரிய நிகழ்வு.
* நகைக்கடன்களில் முறைகேடு நடைபெற்றதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 100 % பொது நகைக்கடன்களை ஆய்வு செய்து நாள்தோறும் அறிக்கை அனுப்ப தமிழ்நாடு அரசு ஆணை
* புலியைக் உடனே சுட்டு கொல்ல வேண்டி சாலை மறியல்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று புலி தாக்கி இறந்த நபரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சாலை மறியல்.
* மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல. T-23 புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன் - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.
* நாளை நான்காம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
* பழைய முறைப்படியும் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அறிவிப்பு.
ஆன்லைன் மூலமும் விவசாயிகள் தங்களுடைய நெல் மூட்டைகளை விற்பனை செய்யலாம் - விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நடவடிக்கை.
* 2021 - FIDE chess உலக பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றது ரஷ்ய அணி
இந்திய அணி வீராங்கனைகள் குழு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்று சாதனை
No comments:
Post a Comment