வீரபாண்டியார் மகன் வீரபாண்டி ஆ.ராஜா Ex MLA மறைவுக்கு - பாமக தலைவர் ஜி.கே.மணி ஆழ்ந்த இரங்கல்.
வீரபாண்டியாரின் மகனும் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணிக்குழு செயலாளருமான ராஜா மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இன்று பிறந்தநாள் கொண்டாட வேண்டிய அவர் பிறந்த நாளிலேயே இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். வீரபாண்டியார் அவர்களின் பெயரும் புகழும் பெருமையும் எல்லோரும் அறிந்தது. அவரும் மறைந்து, அவருடைய மூத்த மகன் செழியனும் மறைந்து, குடும்ப வாரிசாக இருந்த ராஜாவின் மறைவு அந்த குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை எண்ணி மிகவும் வேதனைப்படுகிறோம். அவரை இழந்து மீளாத்துயரில் வேதனையில் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பரகளுக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்...
No comments:
Post a Comment