அக்னிப்புரட்சி இன்றைய (10.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (10.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (10.10.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ 101.53 ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 97.26 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* அனல் மின்நிலையங்களுக்கு தங்கு தடையின்றி நிலக்கரி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிக்கை

* விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன்.

அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுங்கள்.
:வி.கே.சசிகலா, முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர்

* ஆங்கில நாளேடு கருத்தரங்கு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.

அனைத்து மாவட்டங்களையும், அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சராக இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளதை விட ஒரு பத்திரிகையாளராக வந்துள்ளேன் என பெருமைப்படுகிறேன்- டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் மெர்சண்ட்ஸ் ஆஃப் மெட்ராஸ் சிறப்பு பிரதியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

* 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

* தமிழகத்தில் 5ஆம் கட்ட தடுப்பூசி மெகா முகாம் தொடங்கியது:

தமிழகத்தில் இன்று 30 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்பட்டது

5ஆம் கட்டமாக இந்த முகாம் நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு இந்த முகாம் தொடங்கிய நிலையில் மாலை 7.30 மணி வரை நடைபெற்றது.

இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் இரவு 7.30 மணி நிலவரப்படி 22.02 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages