அக்னிப்புரட்சி இன்றைய (14.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (14.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (14.10.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ 102.10 ஆகவும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து ரூ 97.93 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* நார்வே தலைநகர் ஒஸ்லோ அருகே ஒரு நபர் வில் அம்புகளை கொண்டு நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை.

* தமிழக வரலாற்றில் முதல்முறையாக ரூ.100ஐ கடந்தது டீசல் விலை

கடலூர் மாவட்டம் குமராட்சியில் ரூ.100.29க்கு டீசல் விற்பனை.

காட்டுமன்னார் கோவில் பகுதியிலும் 100 ரூபாயை கடந்தது.

கடலூரில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.104.16, டீசல் விலை ரூ 99.95க்கு விற்பனை. தொடர்ந்து  உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.

* தமிழக மீனவர்கள் 23 பேர் கைது:
நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை கோடியக்கரை அருகே கைது செய்தது இலங்கை கடற்படை.

3 விசைப்படகுகளில் சென்ற மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தது இலங்கை கடற்படை.

* தீபாவளி - ரேஷன் விநியோகத்திற்கு சிறப்பு ஏற்பாடு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1,2 மற்றும் 3-ம் தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகளை திறந்திருக்க வேண்டும்- உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உத்தரவு.

* ரூ.36 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 உயர்ந்து ரூ.36,040க்கு விற்பனை.
கிராமுக்கு ரூ.51 உயர்ந்து ரூ.4,505க்கு விற்பனை.

* தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்; நமக்கான காலம் நிச்சயம் வரும், அதுவரை தொண்டர்கள் துவண்டுவிடாமல் வெற்றியை நோக்கி அயராது பாடுபட வேண்டும்- உள்ளாட்சித் தேர்தல் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை.

* பொதுமக்கள் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை பொது இடங்கள் & நீர்வழித்தடங்களில் கொட்டுவதைத் தவிர்க்கும் படி பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.

கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை கொட்டியோருக்கு ₹6.14 லட்சம் தண்டம் விதிப்பு

* வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட அனுமதி:

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளி வழிபாட்டு  தலங்கள் திறப்புக்கு தமிழக அரசு அனுமதி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு. ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்கு செல்லவும் தமிழக அரசு அனுமதி.

நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்க அனுமதி. தனியார் நிறுவனங்கள் நடத்தும்  பொருட்காட்சிகளுக்கு அனுமதி.

அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் நடத்த தடை தொடரும் - முதல்வர் ஸ்டாலின்.

* இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக குடிமைப் பணி அலுவலர் சங்கர் லால் குமாவத்தை நியமித்து தமிழக அரசு ஆணை

* சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

* காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் ஊழியர் படுகொலை சம்பவத்தில் அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் கடந்த 4ம் தேதி இரவு டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

அப்போது மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டது.

இதில் டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாஸ் உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த மற்றொரு ஊழியருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொள்ளையர்கள் தாக்குதலால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் துளசிதாஸ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். 

இதேபோன்று அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages