அக்னிப்புரட்சி இன்றைய (15.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (15.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (15.10.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 102.40 ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 98.26 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கில்லி மாதிரி செயல்படுகிறது; அதன் காரணமாகவே பள்ளிகள் திறக்கப்படுகிறது, பள்ளிகள் திறந்ததற்கு முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் நன்றி
- நடிகர் பிரபு.

* சென்னை கிரீம்ஷ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் எம்‌ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரை முதல்வர் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

* அதிமுக தலைமை அலுவலகம் இனி எம்.ஜி.ஆர் மாளிகை.

அதிமுக தலைமை அலுவலகம் இனி எம்.ஜி.ஆர் மாளிகை என்று அழைக்கப்படும்- கட்சியின் பொன் விழாவை முன்னிட்டு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு.

* ஜே.இ.இ. தேர்வு முடிவுகள் வெளியீடு:

ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வு முகமை.

முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வில் 1.41 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், 41,862 பேர் தேர்ச்சி.

தேர்வின் முடிவுகளை  jeeadv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

JEE Advanced 2021 தேர்வு முடிவுகளை வெளியிட்டது IIT காரக்பூர் -  29.54% தேர்ச்சி

IIT தில்லியை சேர்ந்த மிரிதுல் அகர்வால் தரவரிசைப் பட்டியலில் முதலிடம்.

1,41,699 பேர் தேர்வு எழுதியதில் 6,452 பெண்கள் உள்ளிட்ட 41,862 பேர் தேர்ச்சி!

* ஆட்கொல்லி புலி சிக்கியது:

நீலகிரியில் 4 பேரை கொன்ற அச்சுறுத்தும் புலிக்கு நேற்று இரவு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், புலி அடர்ந்த புதருக்குள் தப்பி ஓட்டம்.
 
இரவு முழுவதும் தேடுதல் பணி தொடர்ந்த நிலையில் கூடலூர் வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிப்பட்டது.

பிடிபட்டது T23 ! நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி சிக்கியது

நேற்று இரவு 2 மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும் தப்பித்த ஆட்கொல்லி புலி இன்று உயிருடன் பிடிபட்டது.

* பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

4 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், அரியானா மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம்.

உச்சநீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி தயாரான பட்டாசுகளுக்கு அனுமதி தர வேண்டும்- முதல்வர்.

* தூத்துக்குடியில் என்கவுன்டர்:
தூத்துக்குடி; பல்வேறு குற்றச் செயலில் தொடர்புடைய குற்றவாளி துரைமுருகன், காவல் ஆய்வாளரை தாக்க முயன்றபோது சுட்டுக்கொலை.

18 வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்பவரை காவல்துறையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.

* புதுச்சேரியில் தற்போதுள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு வழக்கம்போல் அமலில் இருக்கும்.

இரவு நேர ஊரடங்கு நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் கடற்கரைச் சாலைகள், பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அனுமதி.

செகந்திராபாத்தில் இருந்து காட்பாடி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், காரைக்குடி வழியாக  இராமேஸ்வரத்திற்கு புதிய வாராந்திர தொடர்வண்டி சேவை  அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த சேவை, மறுமுனையில் 21 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது.

* ஐபிஎல் இறுதி போட்டி - கொல்கத்தா அணி வெற்றி பெற 193 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் 32 ரன்கள், டு ப்ளஸி 86 , உத்தப்பா 31 ரன்கள் எடுத்தனர்.

* 4வது முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே:

கொல்கத்தா அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages