கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டு கோவிந்தராசு அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் முதல் கட்டமாக ரூபாய் ஐந்து லட்சம் நிதி உதவி வழங்கினர்.
கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டு கோவிந்தராசு அவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்க வழிகாட்டிய மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும்
கோவிந்தராசு அவர்களின் மகன் செந்தில்வேல், மகள் வளர்மதி, மருமகள் வனஜா, மருமகன் திருமுருகன் ஆகியோர் இன்று (16.10.2021) மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் முதல் கட்டமாக ரூபாய் ஐந்து லட்சம் நிதி உதவியை மருத்துவர் அய்யா அவர்களின் சார்பாக வழங்கி, அவர்களின் இடுசெய்ய முடியாத இழப்புக்கு மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலில்அனைத்து விதமான சட்டபோராட்டமும் நடத்தி நீதி பெற்று தருவதாக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உறுதியளித்தார். உடன் மாநில துணை பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
No comments:
Post a Comment