அக்னிப்புரட்சி இன்றைய (21.10.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 103.61 ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 99.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும் வழியில் விதிமுறைகளை மீறி அவர்களின் உறவினர்களை சந்திக்க அனுமதித்த காவல்துறையினர்.
* ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா உத்தரவு.
* சென்னை: காவலர் வீரவணக்க நாளையொட்டி, டி.ஜி.பி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் சைலேந்திர பாபு உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி.
* அமெரிக்காவில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்- ஒரே நாளில் 2,005 பேர் பலி.
அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,425.
ரஷ்யாவில் ஒரே நாளில் 1028 பேர் கொரோனாவால் மரணம்.
* கொரோனா தடுப்பூசி - 100 கோடி இலக்கை எட்டியது இந்தியா
9 மாதங்களில் 100 கோடி கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை எட்டியது இந்தியா.
கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 100 கோடியை கடந்துள்ளது.
* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, சவரன் ரூ.35,875-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.4,484-க்கு விற்பனை ஆகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* அம்மா உணவகத்தில் இரவு நேரத்தில் சப்பாத்தி தொடர்ந்து வழங்கப்படும்!
கோதுமை மாவு அரைக்கும் தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கடந்த 10 நாட்களாக சப்பாத்திக்கு பதில் தக்காளி சாதம் வழங்கப்பட்டதாக பெருநகர சென்னை மாநகராட்சி விளக்கம்
* தடுப்பூசி கிடங்கு ஊழியர், வட்டார சுகாதார புள்ளியியலாளர், புள்ளியியல் உதவியாளர் அடங்கிய ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணிகளில் உள்ள 193 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிக்கையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
விண்ணப்பிக்க கடைசி தேதி:19.11.21
* தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருந்தாலும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.
சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; முகக்கவசம் அணிய வேண்டும்-மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய பலர், 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும்.
மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்- ராதாகிருஷ்ணன்.
* 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது.
நாம் இந்திய அறிவியலின் மாண்பை, கூட்டுமுயற்சியின், செயலாக்கத்தின் வெற்றியைக் கண்டு கொண்டிருக்கிறோம்.
இந்தியாவின் விஞ்ஞானம், சுறுசுறுப்பு, 130 கோடி மக்களின் உற்சாகமே சாதனைக்கு காரணம். வாழ்த்துகள் இந்தியா.
100 கோடி தடுப்பூசி செலுத்திவிட்டோம். மருத்துவர்கள், செவிலியருக்கு நன்றி.
இந்த சாதனையை எட்ட உதவி ஒவ்வொருவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
* பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.
உச்ச வரம்பு எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது? எந்த தரவுகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது?
ஓ.பி.சி பிரிவிலும் 8 லட்சத்துக்கு குறைவான வருமானத்தில் உள்ளவர்களும் உள்ளனரே, அவர்களும் பாதிப்படைகின்றனரே ?
ஒரு விசயத்தை புரிந்துகொள்ள வேண்டும் EWS பிரிவினர் socially & educationally பின் தங்கியவர்கள் இல்லை.
* ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்ததாக புகார் , கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.
கோவையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
2 மது பாட்டில்கள், காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்.
ஐஸ்கிரீம் கடையின் உரிமத்தை ரத்து செய்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடவடிக்கை.
* டி23 புலியை பிடித்த வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு பாராட்டு.
புலியை வேட்டையாடி பிடிக்க வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சங்கீதா தோக்ரா தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு.
* கொடநாடு வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான கனகராஜ் உயிரிழந்த வழக்கு.
கனகராஜ் விபத்தில் உயிரிழந்த வழக்கில், மீண்டும் விசாரணை நடத்த உத்தரவு- சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்ரீ அபிநவ் உத்தரவு.
டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையில் இன்று முதல் விசாரணை.
* மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.
ஜூலை 1 ஆம் தேதி முதல் 3% அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும் - மத்திய அரசு.
* நேர்மையாக இருக்கும் அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யவே போராட வேண்டியுள்ளது.
நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு எதிரான நிகழ்வுகள் முறையாக கையாளப்படாவிட்டால், அதிகாரிகள் எப்படி நேர்மையாக இருப்பார்கள்?-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
* கல்வியை எளிதில் அணுகும் வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம்.
உடல்நலம் சரியில்லாத, மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆன்லைன் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும் -உயர்நீதிமன்றம் யோசனை.
* மாநகராட்சி ஆனது கடலூர்.
புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 5 மாநகராட்சிகளுக்கான அவசர சட்டம் அரசிதழில் வெளியீடு.
கடலூர், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், சிவகாசி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
* சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு: பள்ளிகளை மூட அரசு உத்தரவு.
சீனாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிப்பால் விமானங்கள் ரத்து.
தொற்று பரவக்கூடிய இடங்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கவும் சீன அரசு நடவடிக்கை.
* கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி ஆகியவை அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு.
No comments:
Post a Comment