அக்னிப்புரட்சி இன்றைய (23.10.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 104.22 ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 100.25 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* தமிழகத்தில் இன்று 6 - வது கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் துவங்கியது.
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தற்போது வரை 60 லட்சம் டோஸ்கள் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது மற்றும் அசைவ பிரியர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை இருந்த தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .
* காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி வெட்டிக்கொலை.
பதற்றம், கலவரத்தை தடுக்க திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.
144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
தேவமணி வீடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
* நவம்பர் 1ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
* மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை - சென்னை உயர்நீதிமன்றம்.
மயானங்களில் அனைத்து தரப்பினரின் உடல்களை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
இதனை தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் உத்தரவு.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள எரிபட்டி பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தினர் உடல்களை தகனம் செய்ய தடை விதிக்கக் கோரி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.
* கட்டுமான பொருட்கள் விலையுயர்வு - எடப்பாடி பழனிசாமி அறிக்கை.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாத காலத்திற்குள் கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் சொந்த வீடு மட்டுமல்லாது, கட்டிய வீடுகளில் சிறு சிறு ரிப்பேர் பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் படி கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் இணைத்து நியாயமான விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி.
* தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு:
தமிழக அரசு ஊழியர்களுக்கு ’சி’-’டி’ பிரிவு ஊழியர்களுக்கு 10% வரை போனஸ்.
2,87,250 ஊழியர்களுக்கு கருணைத்தொகை கிடைக்கும்-முதல்வர் அறிவிப்பு.
* கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு சிபிசிஐடி காவல்.
கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு.
2 நாள் விசாரணைக்கு சிபிசிஐடி அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி.
* 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி - மாநில தேர்தல் ஆணையம்.
ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக - 6, காங்கிரஸ் - 2, விசிக ஒரு இடத்திலும் வெற்றி - மாநில தேர்தல் ஆணையம்.
ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக - 68, அதிமுக 1 இடத்தில் வெற்றி.
ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக - 62, காங்கிரஸ் - 3, அதிமுக 1, சுயேட்சை - 2 இடங்களிலும் வெற்றி.
* விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள கூழாங்கல் திரைப்படம் சிறந்த இந்திய திரைப்படமாக ஆஸ்கருக்கு பரிந்துரை.
இப்படம் ரோட்டர்டாம் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை வென்றுள்ளது.
டைகர் விருதைப் பெற்ற முதல் தமிழ் திரைப்படம் கூழாங்கல்.
* நடிகர் காயத்திரி ரகுராம் குறித்து கொச்சையாக டுவிட்டரில் பதிவிட்டதை தொடர்ந்து, மதுரை தெற்கு மாவட்ட DMK IT wing துணை அமைப்பாளரான ஜெயச்சந்திரன் அப்பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தகவல் நுட்பியலணி செயலாளரான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
* ஃபைசாபாத்' இரயில் நிலையத்தை 'அயோத்தியா கண்டோன்மேண்ட்' என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன், ஃபைசாபாத் மாவட்டத்தை அயோத்தியா மாவட்டமாக பெயர் மாற்றம் செய்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
* இந்தியா சார்பில் Oscars-2022 க்கு செல்லும் தமிழ் திரைப்படம்!
புதுமுக இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் & நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள "கூழாங்கல்" திரைப்படம் வெளிநாட்டு மொழிப் பிரிவுக்கான ஆஸ்கர் 2022 விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
* சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவராக சுப வீரபாண்டியன் தலைமையில் 6 உறுப்பினர் கொண்ட குழு நியமனம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
* சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சென்ற முதல்வர் ஸ்டாலின் திடீரென அரசுப்பேருந்தில் ஏறி ஆய்வு.
இலவசப்பேருந்து சேவை எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என பயணிப்பவர்களிடம் கேட்டறிந்தார்.
* சசிகலாவுக்கு உரிமை இல்லை - ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் வாதம்:
அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை.
ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வாதம்.
தன்னை நீக்கி தீர்மானம் நிறைவேற்றிய பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு.
வாதங்கள் முடிவடையாததால் விசாரணை அக்.27-க்கு தள்ளிவைப்பு.
* பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற இருந்த முதலமைச்சரின் ஆலோசனை கூட்டம் அக்டோபர் 26ம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைப்பு.
* பண்ருட்டி முந்திரி தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம். பி ரமேஷ் ஜாமீனை தள்ளுபடி செய்து கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜவஹர் உத்தரவு.
* பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்படலாம் என்ற கட்டுப்பாடு இன்று முதல் தளர்த்தப்படுகிறது
அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி
மருத்துவ தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்த அனுமதி
: கூடுதல் தளர்வுகளை அறிவித்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்
* ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துள்ளது! : நடுவண் அமைச்சர் அமித்ஷா
பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்பட்ட சராசரி இறப்புகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 208 என 2004-2013 வரை இருந்த நிலையில் 2014-2021ல் 30 ஆக குறைந்துள்ளது என 3 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி
No comments:
Post a Comment