புதுவை காரைக்கால் மாவட்ட  பாமக செயலாளர் தேவமணி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் - Agnipuratchi

புதுவை காரைக்கால் மாவட்ட  பாமக செயலாளர் தேவமணி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல்

Share This

புதுவை காரைக்கால் மாவட்ட  பாமக செயலாளர் தேவமணி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல்

1. புதுவை காரைக்கால் மாவட்ட  பாமக செயலாளர் தேவமணி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மிகச்சிறந்த  தொண்டரை இழந்த சோகத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!(1/4)

2. மனித உயிர்களைப் பறிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் கூலிப்படைக் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டியது. தேவமணி கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலிப்படைகளை முற்றிலுமாக வேரறுக்க வேண்டும்!(2/4)

3. தேவமணி படுகொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தக் கொலையில் வெறும் கருவிகள் தான். தேவமணி படுகொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதிவலை உள்ளது. காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பெரிய மனிதர்களுக்கு இதில் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது!(3/4)

4. தேவமணி கொலை வழக்கை தவறாக நடத்தி உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை தப்பிக்கவிடக் கூடாது. கொலையாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தவறினால் பா.ம.க. சட்டப்படியான நடவடிக்கைகளையும், கடுமையான போராட்டங்களையும் முன்னெடுக்கும்!(4/4)
#JusticeForDevamani #PMK

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages