அக்னிப்புரட்சி இன்றைய (24.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (24.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (24.10.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 104.52ஆகவும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து ரூ 100.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு:

தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.
இந்த விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

இந்த நேரத்தில் கே பாலச்சந்தர் சார் இல்லாதது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. இந்த விருது வாங்கிய பிறகு மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கின்றேன்.

* பண்டிகை காலங்களில் உள்ளூர் பொருட்களை வாங்கினால், உங்கள் பண்டிகைகளும் பிரகாசிக்கும்.

அதேவேளையில்
ஏழை உழைப்பாளிகள் வீட்டிலும் பிரகாசம் ஒளிரும் -மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர்.

100 கோடி தடுப்பூசி தவணைகளை செலுத்திய பின்னர் இன்று நம் தேசத்தில் புதிய உற்சாகம், புதிய சக்தி பெருக்கெடுத்து  கொண்டிருக்கிறது.

* 2021-22 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்

இளநிலை, முதுநிலை, பட்டயம் என 150 வகையான படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு tnou.ac.in

* புதிய நிர்வாக அமைப்பு முறை குறித்த பயிற்சி வகுப்பு

இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த ரயில்வே போக்குவரத்துத்துறை  மருத்துவமனை ஊழியர்களுக்கும்
இந்தியில் மட்டுமே வகுப்பு நடத்தப்படுவதற்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் கண்டனம்

* B.Sc Nursing, B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர நாளை முதல் நவம்பர் 10-ம் தேதி வரை tnhealth.tn.gov.in ,  tnmedicalselection.org இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

* புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியில் பிரபல ரவுடிகளான பாம் ரவி, அந்தோணி ஆகியோரை நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்த மர்ம நபர்கள்; போலீசார் விசாரணை.

* நவம்பர் 1ஆம் தேதியே மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டாயமில்லை-அமைச்சர் அன்பில் மகேஷ்.

1 முதல் 8 வகுப்புகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டாயமில்லை.

தீபாவளி திருநாளுக்குப் பிறகு பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் அதன் பிறகு வரலாம்.

மாணவர்கள் காலை எழுவது, உணவு அருந்துவது, பள்ளிக்கு வருவது போன்ற ஒழுக்க நடவடிக்கைகளை போதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிகள் திறக்கப்படுகின்றன- அன்பில் மகேஷ்.

* பாகிஸ்தான் வெற்றி.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டி; டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டி; 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி.

டி20 உலக்கோப்பையில் முதன் முறையாக இந்தியாவை வென்று உள்ளது பாகிஸ்தான்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages