அக்னிப்புரட்சி இன்றைய (25.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (25.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (25.10.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 104.52 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ 100.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* புதுச்சேரியில் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

வாகன வசதி இல்லாதோர் மற்றும் முதியோர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு.

* மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா:

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 318,413 பேருக்கு கொரோனா.

கடந்த 24 மணி நேரத்தில் 4,668 பேர் உலகம் முழுக்க பலி.

சீனாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், தொற்றுநோய் பரிசோதனைகளை அதிகரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தவும் அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை.

* மருத்துவம் சார்ந்த நர்சிங், பி.பார்ம், ரேடியோகிராபி, உள்ளிட்ட பி.எஸ்.சி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - மருத்துவ கல்வி இயக்கம்.

tnhealth.tngov.in மற்றும் tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

* 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா:

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது 'அசுரன்' திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் தேசிய விருதை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் பெற்றுக்கொண்டனர்.

* பார்த்திபன் இயக்கத்தில் உருவான "ஒத்த செருப்பு" படத்திற்கு "சிறப்பு நடுவர் தேர்வு விருது" வழங்கப்பட்டது.

* சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது டி.இமானுக்கு வழங்கப்பட்டது.

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற "கண்ணான கண்ணே.." பாடலுக்காக டி.இமானுக்கு தேசிய விருது.

* 2019ஆம் ஆண்டுக்கான  தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

* "தாதா சாகேப் பால்கே" விருதுபெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

தாதா சாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி - நடிகர் ரஜினிகாந்த்.

தாதா சாகேப் பால்கே விருதை இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன்.

என்னை அடையாளம் காட்டிய நண்பர் பகதூருக்கு நன்றி.

என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி -
நடிகர் ரஜினிகாந்த்.

* இறக்குமதி காருக்கான வரி தொடர்பான நீதிபதியின் கருத்துகளை நீக்கக்கோரும் விஜய் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு.

இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது.

என்னை குற்றவாளி போல காட்டியுள்ளது -விஜய் தரப்பு.

நுழைவு வரி செலுத்துவதில்லை, வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவது தேவையற்ற கருத்துகள்.

கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது.

என்னை தேச விரோதியாக கூறுவது தவறு; என் வழக்கு மட்டும் அல்லாமல் நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் பொதுப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டது-நடிகர் விஜய் தரப்பு வாதம்.

* சசிகலாவை அதிமுக ஏற்குமா? - ஓபிஎஸ் பதில்

அதிமுக தொண்டர்களின் இயக்கம்; இரட்டை தலைமையின் கீழ் கட்சி சிறப்பாக செயல்படுகிறது, சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்-ஓ.பன்னீர்செல்வம்.

சசிகலாவை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார்- ஜெயக்குமார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் முடிவு செய்தால் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஆலோசிக்கலாம்; சசிகலாவை எதிர்த்தே ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார்-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தீர்மானம்.

சசிகலாவுடன் அதிமுகவினர் எந்தவித தொடர்பும் வைக்க கூடாது என கூறியவர் ஓபிஎஸ் - சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்துக்கு ஜெயக்குமார் பதில்.

* செளந்தர்யா ரஜினிகாந்தின் Hoote செயலியை துவக்கி வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்.

என் அப்பாவுக்கு தமிழ் எழுத வராது. முன்பு அவர் கட்சி தொடங்குவது சார்ந்த ட்வீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார்.

அப்போது பிறந்த யோசனை தான் Hoote செயலி- சௌந்தர்யா ரஜினிகாந்த்.

என் அப்பாவுக்கு தமிழ் நன்றாக படிக்க தெரியும் ஆனால் எழுதத் தெரியாது. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இதை கூறியுள்ளேன்.

அவருக்கு தமிழ் எழுதத் தெரியாது என்பதால் அவர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள அன்பு குறையப் போவது இல்லை- சௌந்தர்யா.

* ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 2 புதிய அணிகள் அறிவிப்பு.

ஐபிஎல் தொடரில் அகமதாபாத், லக்னோ நகரங்களை மையமாக கொண்ட 2 புதிய அணிகள் சேர்ப்பு.

* மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மரண வழக்கில் 2 பேர் கைது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியங்களை தடுப்பதாக இரண்டு பேரும் கைது.

கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை Lஇலவசமாக வழங்கப்படும் - புதுச்சேரி அரசு அறிவிப்பு.

* தமிழகத்திற்கு முதன்மையான  மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை இன்று துவங்கியது என அறிவிப்பு

மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் அவர்களை சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமித்து முதலமைச்சர்  அறிவிப்பு.

7 பேர் கொண்ட சமூக நீதி கண்காணிப்பு குழுவில் ஒருவர் கூட பெண் இல்லை என விமர்சனம் எழுந்த நிலையில் 8வது உறுப்பினராக மரு. சாந்தி நியமனம்.

* அதிமுக- தொண்டர்களின் இயக்கம். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்

அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம்; ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு. - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு

* சூடானில் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்!

இடைக்கால அரசாங்கம் மற்றும் அமைச்சரவை கலைப்பு

நாட்டில் நெருக்கடி நிலையை பிரகணப்படுத்தி இராணுவப் படை தலைவர் புர்கான் அறிவிப்பு

* NEET முதுநிலை கலந்தாய்வை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் ஆணை

அகில இந்திய இட ஒதுக்கீட்டில்(AIQ),OBC,EWS தொடர்பான வழக்கு முடியும் வரை ஒத்திவைக்க ஆணை

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages