அக்னிப்புரட்சி இன்றைய (29.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (29.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (29.10.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 105.43 ஆகவும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து ரூ 101.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* Facebook, Messenger, Whatsapp, Instagram & Oculus முதலிய செயலிகளை உள்ளடக்கிய Facebook நிறுவனத்தை சீரமைத்து "Meta" என புதிய நிறுவனத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

Facebook , Inc. என இருந்த ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை 'மெட்டா' என மாற்றுவதாக வருடாந்திர 'ஃபேஸ்புக் கனெக்ட்' நிகழ்வில் அறிவித்தார் மார்க் சக்கர்பெர்க்.

சமூக வலைதள சேவையின் பெயர் ஃபேஸ்புக் என்றே தொடரும் எனவும் அறிவிப்பு.

* அமெரிக்காவில் கொரோனா 3-வது அலை கோரத்தாண்டவம்- ஒரே நாளில் 76,063 பேருக்கு பாதிப்பு.

அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு- ஒரே நாளில் 1,203 பேர் உயிரிழப்பு.

ரஷ்யாவில் ஓயாத கொரோனா மரண ஓலம்- 24 மணிநேரத்தில் 1,159 பேர் பலி.

* சென்னை: எதிர்கட்சி தலைவர் பழனிசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதி.

குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் பரிசோதனைக்காக அனுமதி என தகவல்.

* ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மேலும் 3 வருடங்கள் நீட்டிப்பு - மத்திய அரசு.

அவரது பதவிகாலம் வரும் டிசம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் நீட்டிப்பு.

* 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை:

கனமழை காரணமாக திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஜெ. பிரசார வாகனத்தில் சசிகலா தென்மாவட்ட சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.

மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை.

தொடர்மழை காரணமாக நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள்.

* ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸை மீண்டும் நியமத்து நடுவண் அரசு அறிவிப்பு

பிரதமர் மோடி ஆட்சியில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒருவருக்கு பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்படுவது இதுவே முதல்முறை

மேலும் மூன்று ஆண்டுகளுக்கு சக்திகாந்த தாஸ் ஆளுநர்  பதவியில் இருப்பார்.

* கேரளாவில் கல்வி உதவித்தொகை ரத்து - இடைக்கால தடை:

கேரளாவில் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் அரசின் உத்தரவை ரத்து செய்த கேரள உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம்.

* பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கின் விசாரணை நவ.1ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் வரும் 1ஆம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் - நீதிபதி.

முன்னால் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராக தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை.

* இணையத்தில் 'அண்ணாத்த' - நீதிமன்றம் தடை.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தை  சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர்நீதிமன்றம்.

* கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்

மாரடைப்பு  காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்

பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை திரையரங்குகளை  உடனடியாக மூட உத்தரவு

புனித் ராஜ்குமாரின் கண்கள் தானம் வழங்கப்பட்டு வருகிறது

* கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்:

புனித் ராஜ்குமார் திறமைக்காகவும், ஆளுமைக்காகவும் வருங்கால தலைமுறையினரால் நினைவு கூறப்படுவார்" - பிரதமர் மோடி.

* இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் கோவாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

* பீடி, சுண்ணாம்புக்கல் & டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் திரைப்படத்  தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு & பாண்டிச்சேரி தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் அறிவிப்பு

* சிவகங்கை மாவட்டம் கீழடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.

கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு நடைபெற்ற இடத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக கீழடி சென்றுள்ளார் மு.க.ஸ்டாலின்.

* தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு  7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

பொதுப்போக்குவரத்தில் பட்டாசுகளை எடுத்து செல்ல அனுமதி இல்லை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்.

* நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்று  அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

காலையில் இருந்து மாலை வரை முழு நேரமும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும்.

ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும்.

பள்ளிகளில் வழக்கம் போல் சத்துணவு வழங்கப்படும்.

ஆன்லைன் வழியில் கல்வி தேவைப்படும் மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைனில் படிக்கலாம் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

* லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை:
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 20 க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு அதிகாரிகள் பணம் மற்றும் பொருட்கள் வசூல் செய்வதாக வந்த தகவலைத் தொடர்ந்து அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

* உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை அனைவரும் பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்- பட்டாசு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.

சரவெடியை தயாரிக்கவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது. பேரியம் நைட்ரேட் கொண்டு உருவாக்கப்படும் பட்டாசுகளுக்கும் தடை;

மீறி வெடிக்கப்பட்டால் போலீஸே அதற்கு பொறுப்பு.

கொண்டாட்டங்கள் அடுத்தவரின் உடல் நலத்தைக் கெடுக்கும் வகையில் இருக்கக் கூடாது - உச்ச நீதிமன்றம்.

* மழைக் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

* இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ஸ்காட்லாந்து வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து "Wanted For Genocide - President of Srilanka" என  அந்நாட்டின் பாராளுமன்றம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் ஒளிரூட்டி ஈழத் தமிழர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

* புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 02-11-2021, 03-11-2021 கல்லறை திருநாள் மற்றும்  திபாவளியை முன்னிட்டு விடுமுறை -  புதுச்சேரி பள்ளி மற்றும் கல்வித்துறை அறிவிப்பு

* தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை (30.10.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்.

* அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்  இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages