அக்னிப்புரட்சி இன்றைய (04.11.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.26 ரூபாய் குறைந்து ரூ 101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 11.16 குறைந்து ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வந்தாலும் வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை கொண்டாடிவரும் அனைவருக்கும் அக்னிப்புரட்சி இதழின் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்……
* புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 7 ரூபாய் குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.
இதன்மூலம் புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.12.85, டீசல் விலை 19 ரூபாயும் குறைந்தது.
புதுவையில் பெட்ரோல் 94.94 ரூபாய்க்கும், டீசல் 83.58 ரூபாய்க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
* செங்கல்பட்டு, பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக்குறவர்கள், இருளர் இன மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நரிக்குறவர்கள், இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளையும் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* பூஞ்சேரி இருளர், குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ் வழங்கினேன்.
இம்மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது, இதேபோல் 2 வார காலத்துக்கு தமிழ்நாடு முழுக்க இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்ய உத்தரவிட்டுள்ளேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சகோதரி அசுவினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல, மரியாதை.
அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு, விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்:
ஜம்மு-காஷ்மீர் ராஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா செக்டாரில் பிரதமர் தீபாவளி கொண்டாட்டம்.
ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.
எல்லையில் ராணுவ வீரர்கள் உள்ளதாலேயே 130 கோடி மக்களும் நிம்மதியாக உள்ளனர்.
பண்டிகைகளை மகிழ்ச்சியாக கொண்டாட ராணுவ வீரர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை.
ராணுவ வீரர்களின் தியாகம் என்றென்றும் நினைவுகூரத்தக்கது.
நான் பிரதமராக இங்கு வரவில்லை; உங்கள் குடும்பத்தில் ஒருவராக உங்களுடன் தீபாவளி கொண்டாட வந்துள்ளேன்- ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி உரை.
* டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
* விடிய விடிய மதுபானம் அருந்திய 3 பேர் உயிரிழப்பு.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் தீபாவளியை கொண்டாட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழப்பு.
மது அருந்திய சக்திவேல், பார்த்திபன், முருகானந்தம் ஆகிய 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.
* புதுச்சேரி அருகே சின்னகோட்டக்குப்பத்தில் நாட்டு பட்டாசு வெடித்து பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மற்றும் 8 வயது குழந்தை உடல்சிதறி உயிரிழப்பு.
பைக்கில் கொண்டுவரப்பட்டது பட்டாசா அல்லது நாட்டு வெடிகுண்டா எனவும் போலீசார் விசாரணை.
* தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியீடு.
தாம்பரத்துடன் பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உதயமானது.
* தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கல்லாறு பகுதிக்கு குளிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் தவிப்பு.
வழியில் இரண்டு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் திரும்ப முடியவில்லை; தீயணைப்புத்துறையினர் சிக்கியவர்களை மீட்க முயற்சி.
* தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் கிராமம் பெரியாற்றில் கடையநல்லூர் பகுதிக்கு குடிநீர் வழங்கும் பூஸ்டர் வழியாக தீயணைப்பு காவல்துறை உதவியுடன் காசிதர்மம் கிராமம் வழியாக சென்று இரண்டு டிராக்டர்கள் மூலம் சுமார் 50 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் சொக்கம்பட்டி கிராம பெரியநாயகி அம்மன் கோவில் மண்டபத்தில் இருந்த சுமார் 20 நபர்கள் நீர்வரத்து குறைந்ததை அடுத்து அவர்களும் ஆற்றின் மறு புறத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கிய அனைவரும் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர்.
No comments:
Post a Comment