அக்னிப்புரட்சி இன்றைய (14.11.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (14.11.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (14.11.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* கோவை மாணவி தற்கொலை பள்ளி முதல்வர் கைது.

கோவை 12 ம் வகுப்பு  மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்.

சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது.

பெங்களூரில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

* கொரோனா கட்டுப்பாடு - நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வடகிழக்கு பருவமழை, மழை, வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு நடவடிக்கை.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் - முதல்வர்

* கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர்களுக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி நேரில் ஆறுதல்.

போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்; பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவி எண் உள்ளது; எந்த பிரச்னையாக இருந்தாலும் அதில் தொடர்பு கொள்ளலாம் -அமைச்சர் அன்பில் மகேஷ்.

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருகிறது. 24 மணி நேரத்திற்குள் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்

பள்ளி முதல்வரையும் உடனடியாக கைது செய்துள்ளோம். பள்ளி முதல்வரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

* முதல்வரின் முகவரி’ - அரசாணை வெளியீடு:

முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியீடு.

முதல்வர் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார் - தமிழக அரசு.

முதல்வரின் முகவரி துறையில் மனுக்கல் தீர்வுக்காண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் - தமிழக அரசு.

* வடகிழக்கு பருவமழை - முதல்வர் ஆலோசனை.

கன்னியாகுமரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை நாளை ஆய்வு செய்ய உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.

நாளை கன்னியாகுமரி , நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு.

நாளை ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

நாளை புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை தொடரும்.

* திருப்பூர், வீரபாண்டி அருகே உள்ள சாயப்பட்டறையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு.
3 பேர்  ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி.

* தென்பெண்ணை ஆற்றில் 3 பேர் அடித்துச்செல்லப்பட்டனர்.

கடலூர்: நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றில் 3 பேர் அடித்துச்செல்லப்பட்டனர்.

3 பேரையும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடிய நிலையில் 2 உடல்கள் மீட்பு.

ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இரட்டையர்கள்  மாதவன்(21), மாளவிகா(21) மற்றும் லோகேஷ்(18) ஆகிய 3 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள்.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை கரணமாக நாளை (நவம்பர் 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

* ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு.……

இன்று இரவு முதல் அடுத்த 7 நாட்களுக்கு (நவம்பர் 20), இரவு 11.30PM முதல் - அதிகாலை 5.30AM வரை ரயில் முன்பதிவு செய்யும் வசதி தொழில்நுட்ப காரணங்களால் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

* டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா:

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

* சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடம் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக நாளை(15ம் தேதி) மாலை நடை திறக்கப்படுகிறது.

16 ம் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா 2 டோஸ் தடுப்பூசி, ஆர்டிபிசி நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

இந்த நிலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக நாளை(15ம் தேதி) மாலை நடை திறக்கப்படுகிறது. அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த வருடமும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிலக்கல் பகுதியில் தான் நிறுத்த வேண்டும்.

அங்கிருந்து கேரள அரசு பஸ் மூலம் தான் பம்பைக்கு செல்ல முடியும்.

டிரைவர் உள்ள வாகனங்களில் வரும் பக்தர்கள் பம்பை வரை செல்ல முடியும்.

அவர்களை அங்கு இறக்கிவிட்டுவிட்டு டிரைவர்கள் வாகனத்துடன் நிலக்கல்லுக்கு திரும்பி வந்துவிட வேண்டும்.

இந்த வருடமும் சன்னிதானத்தில் தங்க அனுமதியில்லை.

* டி20 உலக கோப்பையை முதல் முறையாக வென்றது ஆஸ்திரேலியா.

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 172/4 ரன்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவரில் 173 ரன்கள் எடுத்து கோப்பையை வென்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages