பண மோசடி மற்றும் பயங்கரவாதத்துக்கு உதவும் என்பதால், 'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணய பயன்பாட்டுக்கு தடை விதிப்பது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பணம் இல்லாத பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி பல நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. பிட்காயின் உட்பட பல மெய்நிகர் பணம் புழக்கத்தில் உள்ளன. இந்த மெய்நிகர் நாணயப் பயன்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை, கடந்தாண்டு மார்ச் மாதம் நிராகரித்தது.
இதையடுத்து டிஜிட்டல் வடிவிலான புதிய கரன்சியை தானே அறிமுகம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் பிரச்னை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் இன்று (நவ.13) ஆய்வு கூட்டம் நடந்தது. இதில்
கண்ணுக்குத் தெரியாத இந்த கரன்சி பயன்பாட்டில் உள்ள ஆபத்து குறித்து விவாதிக்கப்பட்டது. கட்டுப்பாடு எதுவும் இல்லாத இந்த சந்தை, பண மோசடி செய்வதற்கும், பயங்கரவாத சம்பவங்களுக்கும்உதவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால் கிரிப்டோகரன்சி பயன்பாட்டுக்கு தடை விதிக்க அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.பொய் வாக்குறுதிகள் அளித்து மக்களை இதில் முதலீடு செய்ய ஈர்க்கும் விளம்பரங்களை கட்டுப்படுத்த முதலில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment