19.11.2021 வெள்ளிக்கிழமை, தருமபுரி நகராட்சி, 10 வது வார்டு, சத்யாநகர், நந்திநகர், ஏஎஸ்டிசி நகர், டிஎன்வி நகர், சவுளுப்பட்டி ஆகிய பகுதிகளில் தொடர் மழைக்காரணமாக மக்களின் குடியிருப்புகள், சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிவெங்கடேஷ்வரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழைநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் மக்கள் அவதியுற்றனர். உடனடியாக தருமபுரி நகராட்சி அலுவலர்களை நேரில் அழைத்து, ஜெசிபி இயந்திரம் கொண்டுவரப்பட்டு தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. தருமபுரி நகராட்சி, மேற்கண்ட பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் தேங்காத வகையில் சாக்கடை கால்வாய்களை தூர்வாரி, மழைநீர் எளிதில் சென்றடையும் வகையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், மேலும், குமாரசாமிபேட்டை இரயில்வே மேம்பாலம் பகுதியில் அமைந்துள்ள இரயில்வே சுரங்க நடைவழிப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றி, சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார்.
உடன், மாநில செயற்குழு உறுப்பினர் இரா.வணங்காமுடி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், சிறப்பு மாவட்ட செயலாளர் கோ.சின்னசாமி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் தகடூர்தமிழன், தொகுதி அமைப்பு தலைவர் டி.ஜி.மணி, நகர செயலாளர்கள் – வே.சத்தியமூர்த்தி, கி.வெங்கடேஷ், மாவட்ட பொறுப்பாளர்கள் – தங்கராஜ், குமரவேல், வன்னியர் சங்க நகர செயலாளர் கௌரப்பன், நகர அமைப்பு செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment