அக்னிப்புரட்சி இன்றைய (19.11.2021) முக்கிய செய்திகள்.
* திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது; இன்று மாலை மஹா தீபம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் கட்டளைதாரர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
* காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது.- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கோட்டைப்பூண்டி தரைப்பாலம் மூழ்கியதால் மேல்மலையனூர் - அவலூர்பேட்டை போக்குவரத்து பாதிப்பு
* மழை பாதிப்பு, முன்னெச்சரிக்கையாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
* நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்:
நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம்; விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகிறேன்.
நம் நாட்டில் 100 விவசாயிகளில் 80 பேர் சிறு விவசாயிகள், 2 ஏக்கருக்கும் குறைவான நிலமே அவர்களிடம் உள்ளது.
விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க 2014 ஆம் ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்; வேளாண் உற்பத்தியை அதிகரித்துள்ளோம்.
வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். விவசாயிகள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் கடந்த காலத்தில் 5 மடங்கு அதிகரித்துள்ளது.
3 புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டது.
3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற முடிவு செய்திருக்கிறோம்-நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு.
வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது
"உழவர்களின் பிரச்னைகளை தீர்க்க 2014ஆம் ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்; வேளாண் உற்பத்தியை அதிகரித்துள்ளோம்”
- : பிரதமர் நரேந்திர மோடி
உழவர்களின் வேதனைகளை அறிந்தவன் நான். விவசாயிகள் தங்கள் போராட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்- பிரதமர்.
போராட்டம் செய்து வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்லுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்.
இந்த மாதம் தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முறைப்படி 3 வேளாண் சட்டங்களும் திரும்பப்பெறப்படும்
நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
3 வேளாண் சட்டங்களின் நலன்கள் குறித்து உழவர்களுக்கு எங்களால் விளக்க முடியவில்லை. - பிரதமர் நரேந்திர மோடி
* 24 மணி நேரத்தில் திண்டிவனத்தில் அதிகபட்ச கனமழை
கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 22செமீ மழை பதிவு
மேலும் 19 இடங்களில் 10செமீ மேல் மழை பதிவு
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது
- வானிலை ஆய்வு மையம்
* வேளாண் சட்டங்களை திரும்பப் பெற போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்; இது முழுக்க உழவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும், இதுவே வரலாறு சொல்லும் பாடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* வேலூர் மாவட்டத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து குழந்தைகள் உட்பட 9 பேர் பலி.!
* முக்கியமானது:
சரிபார்ப்புக்காக எந்த ஒரு எண்ணையும் அழைக்க/KYC அப்டேட் செய்ய/ஆதார் விவரங்களை புதுப்பிக்க சொல்லும் எந்த பயன்பாட்டையும் பதிவிறக்குமாறு கேட்கும் மோசடி செய்திகளை நம்பவேண்டாம். இதுபோன்ற செயல்களுக்கு எந்த மூன்றாம் தரப்பு பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்ய ஜியோ ஒருபோதும் கேட்பதில்லை. இதுபோன்ற SMS/அழைப்புகளிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள், இதனால் நிதி இழப்பு ஏற்படக்கூடும். பாதுகாப்பாக இருங்கள். அணி ஜியோ
* குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நவ 25-ம் தேதி நடைபெறும்.
கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதத்தை TNPSC யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்- TNPSC அறிவிப்பு.
* வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கன மழையில் வீடு இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு.
உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000ம் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவு.
* ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு
* முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது- மோசடி புகாரில் சரோஜா முன் ஜாமின் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவுபடுத்துவதற்கு நீங்களும், திரைத்துறையினரும் ஆதரவு அளிக்கிறீர்களா?
ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் பாரதிராஜாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.
* ஜன.20க்கு பிறகு நேரடி தேர்வுகள்.
ஜன.20 ஆம் தேதிக்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்.
11 அமைப்புகளை சேர்ந்த மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தோம்.
ஆன்லைன் தேர்வு வேண்டாம்; நேரடி தேர்வுக்கு கால அவகாசம் கோரியுள்ளனர்- அமைச்சர் பொன்முடி.
போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறும் என்று உறுதியை அளித்துள்ளோம்- அமைச்சர் பொன்முடி.
* திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது கார்த்திகை மகா தீபம்.
* முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷூக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
ரமேஷ் ஜாமீன் மனு, சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணை நடைபெற்றது.
இந்த ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட், கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி கோந்தராஜ் மகன் தொடுத்த வழக்கில் வரும் 23 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
* செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கனமழையை தொடர்ந்து விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
கனமழை பாதிப்புகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (நவ. 20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
கடலூர் மாவட்டத்தில் நாளை (நவ.20) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
* தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி.
பொது இடங்கள், மார்க்கெட், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல கட்டுப்பாடு.
தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
* டி20 கிரிக்கெட்: 2 வது போட்டியிலும் நியூசி.,யை வீழ்த்தியது இந்திய அணி.
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
No comments:
Post a Comment