நவம்பர் 26 இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 72 ஆம் ஆண்டின் இந்நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்- பாமக தலைவர் ஜி.கே.மணி
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை மென்மேலும் உருவாக வேண்டும். இந்தியத் திருநாட்டின் நமது அரசியலமைச் சட்டத்தால் அனைவருக்கும் உரிய உரிமைகள் கிடைக்கப் பெற்று அனைவரும் முன்னேற்றம் அடைவதே சட்டத்தின் பயன்.
உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இஃது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 104 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள்(Articles) மற்றும் 1,17,369 சொற்கள் உள்ளன.
இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது.
அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் 'அடிப்படை உரிமைகளும்' அடங்கும்.
மகாத்மா காந்தி மற்றும் நாட்டுக்காக போராடிய எல்லோரையும் இன்று நினைவு கூற வேண்டும். வேற்றுமை கொண்ட இந்திய நாட்டை அரசியலமைப்பு சட்டம்தான் ஒருங்கிணைக்கிறது. பல தடைகளுக்கு, போராட்டங்களுக்கு பின்புதான் இந்த அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.
Home
அண்மை செய்திகள்
நவம்பர் 26 இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 72 ஆம் ஆண்டின் இந்நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்- பாமக தலைவர் ஜி.கே.மணி
நவம்பர் 26 இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 72 ஆம் ஆண்டின் இந்நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்- பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment