அக்னிப்புரட்சி இன்றைய (26.11.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (26.11.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (26.11.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* சென்னை தாம்பரம் பகுதியில்  வாகன சோதனையில் ஆயுதங்களுடன் பிடிபட்டவர்கள்!.

* ரெட் அலர்ட்:
தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.

ஆரஞ்ச் அலர்ட்:
திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்.

* தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்.

* தமிழகத்தில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை - மாநில பேரிடர் மேலாண்மை வாரியம்.

திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், காஞ்சிபுரம், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை - மாநில பேரிடர் மேலாண்மை வாரியம்.

* கோயம்பேட்டில் தக்காளி விலை கடும் சரிவு! கோயம்பேடு வணிக வளாகத்தில் தக்காளி கிலோ ரூ.35/- க்கு விற்பனை.

* அறிமுக போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம்:

தான் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசி அசத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர்.

* எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி காலமானார்; பெருங்குடி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி.
எம்.ஜி.ஆருக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியவர் லீலாவதி.

* 500 சமுதாய உணவகங்கள் 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைக்கப்படும் என்ற அமைச்சர் சக்கரபாணியின் அறிவிப்புக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கண்டனம்.

‘அம்மா உணவகம்' என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது.

புதிய உணவகங்களையும் தொடர்ந்து 'அம்மா உணவகம்' என்ற பெயரிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பி.எஸ்.

* தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.

* முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்.

அணையை பலப்படுத்தவும் பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்டவும் அனுமதி கோரிக்கை.

* சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி?

சிஎம்டிஏ, மார்க்கெட் கமிட்டி ஆகியவை நவ.29-க்குள் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறு வியாபாரிகள் இணைந்து மைதானத்தில் தக்காளி விற்க தற்காலிகமாக அனுமதிக்கலாம் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர்.

* கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை (நவ. 27) ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.

* தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - தொடர்மழை காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

* கான்பூர் டெஸ்ட் - 2வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் சேர்ப்பு.

முதல் இன்னிங்சில் இந்திய அணியை விட 216 ரன்கள் பின்தங்கியுள்ளது நியூசிலாந்து.

* கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை(27.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

* டிசம்பர் 15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை - மத்திய அரசு.

கொரோனா பாதிப்பின் அடிப்படையில் வெளிநாடுகளை 3 வகையாக பிரித்து, அதற்கேற்ப விமானங்களை இயக்க முடிவு.

* கனமழை காரணமாக நாகை, அரியலூர், நெல்லை  மாவட்டங்களில் நாளை(27.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

* சீருடைப்பணியாளர் தேர்வில் தற்காலிகமாக தேர்வான நபர்களின் விவரம் www.tnusrbonline.org-ல் வெளியீடு

2020, 21 -ல் நடந்த எழுத்து தேர்வு, உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் வெளியீடு

3,065 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் உள்பட 11,812 பேரின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

* பெரம்பலூர், புதுவை, காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - தொடர்மழை காரணமாக அறிவிப்பு.

* திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

* பெரம்பலூர், தூத்துக்குடி, நெல்லை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை(27.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

* கன மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை (27-11-21) விடுமுறை அறிவிப்பு.

* கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை(27.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

* கனமழை காரணமாக நாளை செங்கல்பட்டு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

* கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை(27.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

* கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஜாக் நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக கர்நாடக அரசு அணையிலிருந்த நீரை திறந்து விட்டுள்ளது

திறந்துவிடப்பட்ட நீர் நீர்வீழ்ச்சியை வந்தடையும் முன்பாகவே ஆளுநர் பார்வையிட்டு சென்றதால்

மின்சாரம் தயாரிக்க சேமிக்கப்பட்ட நீர் வீணாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

* தமிழகத்தின் "மழை நாள்!"
தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்ச சராசரி மழைப்பொழிவு 4 செமீ ஆக நேற்று (வியாழன்-வெள்ளி) பதிவாகியுள்ளது.

இது கடந்த 3 ஆண்டுகளில் பதிவான ஒரு நாள் சராசரி அளவில் அதிகபட்சமாகும். காயல்பட்டினத்தில் (தூத்துக்குடி) 31 செமீ மழை 24 மணி நேரத்தில் பதிவு

* முக்கிய அறிவிப்பு:
தொடர் மழை காரணமாகவும், அதிக மழை பெய்ய வாய்ப்பு இருக்குமென வானிலை     எச்சரிக்கை இருப்பதாலும் மாணவர்கள் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மற்றும் கல்லூரிகளுக்கும்  நாளை 27.11.2021 ஓருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் - விழுப்புரம் .

* தொடர் கனமழை  காரணமாக நாளை (27.11.2021) கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.

* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே வேளாண் சட்ட வாபஸ் மசோதா தாக்கலாகிறது.

3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான மசோதாவை தாக்கல் செய்கிறார் வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர்.

* கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 3 காட்டு யானைகள் உயிரிழப்பு.

ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தாய் யானை மற்றும் 2 குட்டி யானைகள் ரயில் மோதி உயிரிழந்ததாக தகவல்.
சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைவு.

* சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages