அக்னிப்புரட்சி இன்றைய (03.12.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சில கிராமங்களில் அதி காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்
* சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பாதிப்பா என கண்டறிய மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
* மூன்றாவது தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு தொடங்கினால் தமிழ்நாட்டிலும் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கிலாந்திலிருந்து சென்னை வந்த 10 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; ஓமிக்ரான் பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஓமிக்ரான் தொற்று பரவியதாக சமூக வலைத்தளங்களில் வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
* அதிமுக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளருக்கான உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கியது.
தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ள பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நாளை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
* மும்பை; இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மழை காரணமாக தொடங்குவதில் தாமதம்.
2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இந்திய அணி வீரர்கள் ஜடேஜா, இஷாந்த் ஷர்மா மற்றும் ரகானே விலகல்.
* அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் அய்யப்பன் கைது.
சில தினங்களுக்கு முன் அரியலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு ஒரு வார காலத்திற்குள் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்கவில்லை என்றால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என பேட்டியளித்த நிலையில் கைது.
* ஒமிக்ரான் பரவல்: 1 முதல் 8ம் வகுப்பு வரை கண்டிப்பாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம் - பள்ளிக் கல்வித்துறை.
அனைத்து வகை பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக் கூடாது.
ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.
வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தனி மனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
நீச்சல் குளங்களை மூட வேண்டும்.
இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.
நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
* இலங்கையில் முதல் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நைஜீரியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பிய நபரிடம் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலை 11.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, மதியம் 12 மணிக்கு ஆட்டம் தொடங்கும். இன்று 78 ஓவர்கள் வீசப்பட்டும் என அறிவிப்பு.
* நாளை முதல் டாஸ்மாக் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் - தமிழக அரசு
* போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாள் கட்டாயம்!
தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த் தாளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியீடு
* மழைநீர் தேங்கும் இடங்களில் அப்பகுதி மக்களின் வழிகாட்டுதல்களோடு இணைந்து அதரிகாரிகள் பணியாற்ற வேண்டும்.
சென்னையில் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான வடிகால்கள் இல்லாததே மழை நீர் தேங்கியதற்கு காரணம்.
முந்தைய பாதிப்புகளை எதிர்வரும் ஆண்டுகளில் தடுத்துவிட்டோம் என்கிற பெயரை நாம் எடுத்தாக வேண்டும். எனவே நடைமுறை சாத்தியமுள்ள திட்ட அறிக்கையை தாருங்கள்.
சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுப்பது குறித்த ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
* விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் பணி செய்ய தடை இல்லை - புதிதாக வெற்றி பெற்றவர்களை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* 2021 NEET தேர்வில் தமிழகத்தில் 15 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும்,
அவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தம் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளதாக நடுவண் அரசு மக்களவையில் தகவல்
* வங்கக்கடலில் உருவானது ஜாவத் புயல்:
மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ஜவாத்' புயலாக மாறியது - இந்திய வானிலை ஆய்வு மையம்
* அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில்
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் - மனுவில் கோரிக்கை.
தேர்தல் முடிந்த பிறகு முறைகேடுகள் ஏதும் நடைபெற்றதாக புகார் எழுந்தால் தேர்தலை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்.
* நீட் தேர்வை ரத்து செய்யும் தனி நபர் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்:
நீட் தேர்வை ரத்து செய்யும் தனி நபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கும் சிறப்பு உரிமை அடிப்படையில் தனிநபர் மசோதாவை வில்சன் எம்.பி.தாக்கல் செய்துள்ளார்.
* 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்:
மத்திய வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக , கடலூர், நாகை, புதுவை, சென்னை உள்ளிட்ட துறைமுகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
* மும்பை டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 221/4 ரன்கள் எடுத்துள்ளது.
மயங்க் அகர்வால் 120, சாஹா 25 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்தின் அஜாஸ் படேல் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
* பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியீடு.
பத்திரிகையாளர்களுக்கு உதவித் திட்டங்களை செயல்படுத்த செய்தித்துறை அமைச்சரை தலைவராகவும், அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 7 பேரையும், அலுவல் சாரா உறுப்பினர்களாக 6 பேரையும் கொண்ட குழு அமைப்பு.
* மதுரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை.
ரேஷன் கடை, திரையரங்கு, வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், துணிக்கடைகள், வங்கிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அனுமதி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
* புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு:
புதுச்சேரியில் 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 6 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் -கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்.
தினமும் அரைநாள் மட்டும் நடக்கும் வகுப்புகளுக்கு விருப்பமுள்ள மாணவர்கள் வரலாம்.
இங்கிலாந்து, சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
எந்த வகையான கொரோனா பாதிப்பு என்பது 4 நாட்களில் தெரியவரும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
* மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து:
கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் ரத்து.
ரூ.2,756 கோடி கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
No comments:
Post a Comment