திருப்பாவை மார்கழி 13ம் நாள் பாடல் விளக்கம். - Agnipuratchi

திருப்பாவை மார்கழி 13ம் நாள் பாடல் விளக்கம்.

Share This

திருப்பாவை மார்கழி 13ம் நாள்
பாடல் விளக்கம்.

கம்சனின் ஆணைக்கு இணங்க, கொக்கு வடிவம் கொண்டு தன்னை அழிக்க வந்த பகாசுரனை அழித்தவன் கண்ணன்.

கண்ணன்  புகழினைப்பாடிக்கொண்டு இளம்பெண்கள் பாவை நோன்பு நோற்கும் இடத்திற்கு எப்போதோ சென்று விட்டனர்.

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று'
வானத்தில் வியாழன் மறைந்து வெள்ளிக் கிரகம் முளைத்து விட்டது.  (வியாழன் உறங்கியதும் வெள்ளி வருவதாகச்சொல்லாமல், வெள்ளி வந்த பிறகு வியாழன் உறங்கச்செல்வதாகவும் ,

(1)வெளிச்சம் வந்தால்தான் இருள் மறைகிறது என்னும் பொருளோடு,
(2)வியாழம் என்பது நவகிரகங்களில் குருவையும், வெள்ளி என்பது சுக்கிரனையும் குறிப்பதாகும்.
(3)வெள்ளி என்னும் சுக்கிரன் தோன்றும்போது, ஜூபிடர்  என்னும் வியாழன் மேற்றிசையில் மெள்ள மெள்ள மறையும்; - இத்தனை அர்த்தங்கள் உள்ளடங்கியது...)

பறவைகள் எல்லாம் விடிவதை எண்ணி ஆரவாரம் செய்கின்றன.

மலரில் உள்ள தேனினை உண்ணும் வண்டுகளைப்போன்ற கண்களை உடையவளே,

இந்த மார்கழியில் விடியும் முன்பே உடல் குளிரும்படி  நீராட வராமல் இன்னும் படுக்கையில் சுருண்டு கிடக்கலாமா?

இந்த நன்னாளில் நீ தூக்கம் என்னும் கள்ளத்தன்மையை விடுத்து எங்களுடன் நீராட வா.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages